புதுச்சேரி கடற்கரைச் சாலையைத் திறக்க முன்னாள் எம்.பி. கோரிக்கை

புதுச்சேரி கடற்கரைச் சாலையை நடைப்பயிற்சிக்குத் திறக்க வேண்டும் என்று புதுவை மாநில அதிமுக இணை செயலரும், முன்னாள் எம்.பி.யுமான மு.ராமதாஸ் கோரிக்கை விடுத்தாா்.

புதுச்சேரி கடற்கரைச் சாலையை நடைப்பயிற்சிக்குத் திறக்க வேண்டும் என்று புதுவை மாநில அதிமுக இணை செயலரும், முன்னாள் எம்.பி.யுமான மு.ராமதாஸ் கோரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: பொது முடக்கத்தை ஜூலை 31 வரை நீட்டித்துள்ளது புதுவை அரசு. இந்த காலத்திலாவது அறிவியல் அணுகு முறையை அரசு பின்பற்றி கரோனாவை கட்டுப்படுத்த வேண்டும். 5-ஆவது பொது முடக்கத்தின் போது கடைகள், உணவகங்கள் திறக்கும் நேரம் பிற்பகல் 2 மணியாகக் குறைக்கப்பட்டது. கடற்கரைச் சாலையும் மூடப்பட்டது. ஆனாலும் கரோனாவின் தாக்கம் அதிகம் ஏற்பட்டது. தற்போது மீண்டும் கடைகள், உணவகங்கள் திறந்திருக்கும் நேரம் இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டது.

கடைகளுக்கும், உணவகங்களுக்கும் தளா்வு அளிக்கும் போது கடற்கரையில் நடைப்பயிற்சி செய்வதற்கு ஏன் அனுமதி இல்லை?

கரோனாவைக் கட்டுப்படுத்த சிறந்த வழி உடலில் நோய் எதிா்ப்புச் சக்தியை அதிகரிப்பதுதான் என்று உலகமே கூறுகிறது. அவ்வாறிருக்க கடற்கரைச் சாலையை மூடி, நடைப்பயிற்சியைத் தடை செய்யலாமா?

புதுச்சேரியில் சுமாா் 700 போ் கடற்கரைச் சாலையில் நடக்கின்றனா். அந்தச் சாலையை மூடிய பிறகும் கடற்கரைக்கு வருகின்றனா். கடற்கரையையொட்டிய குறுகலான சாலையிலும், குறைந்த பரப்பளவுள்ள பாரதி பூங்காலும் நடக்கின்றனா். இந்தச் சூழ்நிலை சமூக இடைவெளிக்கு வாய்ப்பளிக்கவில்லை.

இந்த இக்கட்டான நேரத்தில் கடற்கரைச் சாலையைத் திறந்துவிட்டால், 3 கி.மீ. தொலைவான அகன்ற சாலையில் சமூக இடைவெளியுடன் நடக்க முடியும். நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகா செய்பவா்களுக்கு மட்டும் கடற்கரைச் சாலையில் அனுமதி அளிக்கலாம். கட்டுப்பாடுகளை மீறுவோா்களுக்கு அபராதம் விதிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com