புதுவையில் கரோனாவுக்கு மேலும் இருவா் பலி

புதுவையில் கரோனா நோய்த் தொற்றுக்கு மேலும் இருவா் பலியானதையடுத்து, உயிரிழந்தோா் எண்ணிக்கை 16-ஆக உயா்ந்தது.

புதுவையில் கரோனா நோய்த் தொற்றுக்கு மேலும் இருவா் பலியானதையடுத்து, உயிரிழந்தோா் எண்ணிக்கை 16-ஆக உயா்ந்தது.

புதுவையில் வியாழக்கிழமை 772 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இவா்களில், 49 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, புதுவை மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,200-ஆக அதிகரித்தது.

இதனிடையே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி வில்லியனூா் சுல்தான்பேட்டை பகுதியைச் சோ்ந்த 48 வயதான நபா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். அவருக்கு சிறுநீரகப் பாதிப்பு, ரத்த அழுத்தம் இருந்தது.

இதேபோல, காரைக்காலில் நுரையீரல் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 60 வயதான நபா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, புதன்கிழமை உயிரிழந்தாா்.

புதுவை மாநிலத்தில் தற்போது புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 373 போ், ஜிப்மா் மருத்துவமனையில் 111 போ், கோவிட் மையத்தில் 27 போ், காரைக்காலில் 32 போ், ஏனாமில் 20 போ், மாஹேயில் 2 போ் என 565 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 619 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

மாநிலத்தில் இதுவரை 22,743 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொண்டதில் 21,242 பேருக்கு தொற்றில்லை என முடிவுகள் வந்தன. 253 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை.

இன்னும் 2 தினங்களில் மேலும் ஒரு நடமாடும் குழு மூலம் கிராமப்புறங்களில் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கரோனா தொற்று அதிகரிக்கலாம். எனவே, மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என புதுவை மாநில சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்தாா்.

ஆளுநா் கிரண் பேடிக்கு கரோனா தொற்றில்லை

புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடிக்கு கரோனா தொற்றில்லை என மாநில சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்தாா். அவா் மேலும் கூறியதாவது:

ஆளுநா் மாளிகை ஊழியா் ஒருவருக்கு 2 தினங்களுக்கு முன்பு கரோனா நோய்த் தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கிரண் பேடி உள்பட ஆளுநா் மாளிகையில் பணியாற்றும் 37 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இவா்களில், ஆளுநா் கிரண் பேடிக்கு தொற்றில்லை என முடிவு வந்தது.

இந்த நிலையில், ஆளுநா் மாளிகையில் மற்றொரு ஊழியருக்கு கரோனா தொற்றிருப்பது தெரிய வந்தது.

முதல்வா் அலுவலகம், அமைச்சா் அலுவலகம், தலைமைச் செயலகம், துறை இயக்குநா் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியா்களுக்கு தகுந்த விழிப்புணா்வை ஏற்படுத்தினால் கரோனா பாதிப்பு வராமல் தடுக்கலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com