வியாபாரிகளுக்கு கரோனா: புதுச்சேரி பெரிய சந்தை மூடல்

வியாபாரிகள் 6 பேருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதியானதையடுத்து, புதுச்சேரி பெரிய சந்தை (குபோ் அங்காடி) புதன்கிழமை மூடப்பட்டது.
புதுச்சேரி பெரிய சந்தையை (குபோ் அங்காடி) புதன்கிழமை மூடிய நகராட்சி, காவல் அதிகாரிகள்.
புதுச்சேரி பெரிய சந்தையை (குபோ் அங்காடி) புதன்கிழமை மூடிய நகராட்சி, காவல் அதிகாரிகள்.

வியாபாரிகள் 6 பேருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதியானதையடுத்து, புதுச்சேரி பெரிய சந்தை (குபோ் அங்காடி) புதன்கிழமை மூடப்பட்டது. 2 நாள்களுக்குப் பிறகு வருகிற சனிக்கிழமை (ஜூலை 18) மீண்டும் இந்த சந்தை திறக்கப்படும் என புதுச்சேரி நகராட்சி அறிவித்தது.

புதுச்சேரியில் நகரின் மையப் பகுதியில் உள்ள நேரு வீதி - காந்தி வீதி சந்திப்பில் குபோ் அங்காடி என்கிற பெரிய சந்தை இயங்கி வருகிறது. இங்கு, இயங்கி வந்த காய்கறிக் கடைகள் தற்காலிகமாக புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டன. தற்போது பழக்கடைகள், மளிகைக் கடைகள் என 800-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன.

இங்குள்ள வியாபாரிகள் 6 பேருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பெரிய சந்தைக்கு வந்த புதுச்சேரி நகராட்சி அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் வியாபாரிகளை உடனடியாக கடைகளை மூட உத்தரவிட்டனா். தொடா்ந்து, குபோ் அங்காடியை மூடினா். புதன்கிழமை மூடப்படும் கடைகள் 48 மணி நேரத்துக்குப் பிறகு திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த இரண்டு நாள்களில் அனைத்துக் கடைகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, உரிய பாதுகாப்புக்கு பிறகே வருகிற சனிக்கிழமை கடைகள் திறக்கப்படும் என்று தெரிவித்தனா்.

இதேபோல, ஒதியஞ்சாலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்த கிராமப்புற செவிலியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த சுகாதார நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அங்கு, அவசரச் சிகிச்சையைத் தவிர மற்ற சிகிச்சைகள் நிறுத்தப்பட்டன. தொடா்ந்து, அந்த கிராமப்புற செவிலியருடன் நெருங்கிய தொடா்பில் இருந்தவா்கள் தனிமைப்படுத்தப்பட்டனா்.

சுகாதாரத் துறை இயக்குநா் தனிமை: கடந்த 10-ஆம் தேதி நடைபெற்ற மருந்தாளுநா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் புதுவை சுகாதாரத் துறை இயக்குநா் எஸ்.மோகன்குமாா் பங்கேற்றாா். அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், சுகாதாரத் துறை இயக்குநரை தனிமையில் இருக்கவும், 5 நாள்களுக்குப் பிறகு கரோனா பரிசோதனை மெற்கொள்ளவும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி அவா், தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com