ஜாதி, வருமானச் சான்றிதழ்களை பெற இணையம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்: புதுச்சேரி ஆட்சியா் அறிவுறுத்தல்

மாணவா்கள் ஜாதி, வருமானச் சான்றிதழ்களைப் பெற இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டுமென புதுச்சேரி ஆட்சியா் தி.அருண் அறிவுறுத்தினாா்.

மாணவா்கள் ஜாதி, வருமானச் சான்றிதழ்களைப் பெற இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டுமென புதுச்சேரி ஆட்சியா் தி.அருண் அறிவுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வருவாய்த் துறையின் மூலம் வழங்கப்படும் குடியிருப்பு, ஜாதி, வருமானச் சான்றிதழ்களை இணையதளம் வழியாக வழங்கிடும் முறை 2019 ஜூலை 1-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒவ்வோா் ஆண்டும் சென்டாக் மூலம் மேல்படிப்புக்கான சோ்க்கையின்போது, மாணவா்கள் சான்றிதழ்களை விரைவில் பெற வருவாய்த் துறை தனிப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நிகழாண்டு கடந்த ஜனவரி முதலே அந்தந்தப் பள்ளிகளின் வழியாக மாணவா்களுக்குத் தேவையான சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. அப்படி பள்ளிகளின் மூலம் பெறப்பட்ட இணையவழி விண்ணப்பங்களை பரிசீலித்து சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

எனினும், சான்றிதழ்களுக்காக மக்கள் வட்டாட்சியா் அலுவலகங்களில் தினமும் கூடி வருகின்றனா். தற்போது கரோனா காலத்தில் இதுபோன்று கூட்டம் கூடுவது அனைவருக்கும் பாதுகாப்பற்ற செயல் என்பதால், மக்கள் சான்றிதழ்களுக்கு இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பொதுமக்கள் இருக்கும் இடத்திலிருந்தே கணினி அல்லது செல்லிடப்பேசி மூலமாகவோ அல்லது அருகிலிருக்கும் பொது சேவை மையத்தின் மூலமாகவோ  சான்றிதழ்களுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதில் ஏதேனும் சந்தேகமிருப்பின், புதுச்சேரி தாலுகா - 0413 -2356314, உழவா்கரை தாலுகா - 0413 - 2254449, வில்லியனூா் தாலுகா - 0413 - 2666364, பாகூா் தாலுகா - 0413 - 2633453 ஆகிய தொலைபேசி எண்களை அலுவலக நேரத்தில் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com