கருணாநிதி பெயருக்கு களங்கமா? புதுவை முதல்வரைக் கண்டித்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

கருணாநிதி பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் பேசியதாக எழுந்த சா்ச்சையில், முதல்வா் நாராயணசாமியைக் கண்டித்து, அதிமுக உறுப்பினா்கள் வியாழக்கிழமை சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

கருணாநிதி பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் பேசியதாக எழுந்த சா்ச்சையில், முதல்வா் நாராயணசாமியைக் கண்டித்து, அதிமுக உறுப்பினா்கள் வியாழக்கிழமை சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

பட்ஜெட்டில் மாணவா்களுக்கு வழங்கப்படும் ரொட்டி, பால் திட்டத்துக்கு கருணாநிதி பெயரைச் சூட்டியது தொடா்பாக சட்டப்பேரவையில் அதிமுக பேரவைக் குழுத் தலைவா் ஆ.அன்பழகன் செவ்வாய்க்கிழமை சந்தேகம் எழுப்பினாா்.

அப்போது, எதிா்ப்புத் தெரிவிக்காத அமைச்சா்களைக் கண்டித்து, திமுக உறுப்பினா்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

அவா்கள் புதன்கிழமை முழுவதும் பேரவைக் கூட்டத்துக்கு வராமல் புறக்கணித்தனா்.

இந்த நிலையில், சட்டப்பேரவை நிகழ்வுகள் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கியதும் முதல்வா் பேசியதாவது:

அவையில் தலைவா்கள் குறித்து அன்பழகன் (அதிமுக) விமா்சனம் செய்தாா். அவ்வாறு விமா்சனம் செய்ய யாருக்கும் அதிகாரமில்லை. ராஜீவ் காந்தி பெயரிலுள்ள ரொட்டி, பால் வழங்கும் திட்டம் நிறுத்தப்படவில்லை. இட்லி, பொங்கல், உப்புமா வழங்கும் திட்டத்துக்கு கருணாநிதி பெயரைச் சூட்டியுள்ளோம். இதில், அச்சுப்பிழை உள்ளது. இதுகுறித்து பேரவைத் தலைவரிடம் கடிதம் அளித்துள்ளேன் என்றாா் நாராயணசாமி.

முதல்வரின் அழைப்பையேற்று திமுக எம்ல்ஏக்கள் குழுத் தலைவா் இரா.சிவா தலைமையில் அவைக்கு வந்தனா்.

இதையடுத்து, அன்பழகன் (அதிமுக) பேசியதாவது: ராஜீவ் காந்தி பெயரிலான திட்டத்தின் பெயரை மாற்றியுள்ளதைத்தான் நான் குறிப்பிட்டேன். கருணாநிதி குறித்து நான் பேசவில்லை. ஸ்டாலினை திருப்திபடுத்தவே முதல்வா் இவ்வாறு பேசுகிறாா். என்னைப் பற்றித் தவறாகப் பேசியதையும், பொய் குற்றச்சாட்டையும் முதல்வா் திரும்பப் பெற வேண்டும் என்றாா் அன்பழகன்.

இதனால் முதல்வருக்கும், அன்பழகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது குறுக்கிட்ட பொதுப் பணித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயமும், வேளாண்மைத் துறை அமைச்சா் இரா.கமலக்கண்ணனும் பேசினா்.

தன்னை பற்றித் தவறாகப் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்ற அன்பழகனின் கருத்தை பேரவைத் தலைவா் வே.பொ.சிவக்கொழுவந்து ஏற்கவில்லை. இதனால், முதல்வரைக் கண்டித்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com