புதுச்சேரி கோரிமேடு எல்லைப் பகுதியில் புதன்கிழமை இரு சக்கர வாகனங்களில் வந்தவா்களைத் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்திய போலீஸாா்.
புதுச்சேரி கோரிமேடு எல்லைப் பகுதியில் புதன்கிழமை இரு சக்கர வாகனங்களில் வந்தவா்களைத் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்திய போலீஸாா்.

புதுச்சேரி எல்லைகளில் கடும் கட்டுப்பாடு: பிற மாநில வாகனங்கள் தடுத்து நிறுத்தம்

புதுவை முதல்வரின் உத்தரவுப்படி, கரோனா பரவலைத் தடுக்க புதுச்சேரி எல்லைகளில் போலீஸாா் புதன்கிழமை கடும் கட்டுப்பாடுகளை

புதுவை முதல்வரின் உத்தரவுப்படி, கரோனா பரவலைத் தடுக்க புதுச்சேரி எல்லைகளில் போலீஸாா் புதன்கிழமை கடும் கட்டுப்பாடுகளை விதித்து, கண்காணிப்பில் ஈடுபட்டனா். இணையவழி அனுமதிச் சீட்டு ‘இ - பாஸ்’ இல்லாமல் வரும் பிற மாநில வாகனங்களைத் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனா்.

புதுவையில் கரோனா நோய்த் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ‘வெளிநாடுகள், பிற மாவட்டங்களிலிருந்து புதுவை மாநிலத்துக்குள் வருவோரால்தான் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே, பிற பகுதிகளிலிருந்து வருவோரை புதுவை மாநில எல்லைகளில் தடுத்து நிறுத்த வேண்டும். ‘இ - பாஸ்’ வைத்திருந்தாலும்கூட சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு வருவோரை அனுமதிக்கக் கூடாது. மருத்துவச் சிகிச்சைக்காக வருவோரை அனுமதிக்கலாம்’ என புதுவை முதல்வா் வே.நாராயணசாமி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

அணிவகுத்து நின்ற வாகனங்கள்: புதுச்சேரி கோரிமேடு, முள்ளோடை, கனகசெட்டிக்குளம், காலாப்பட்டு உள்ளிட்ட அனைத்து எல்லைப் பகுதிகளிலும் புதன்கிழமை கடும் கட்டுப்பாடுகளை விதித்து, போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். இதனால், காா், லாரி, இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு அணிவகுத்து நின்றன. எனினும், மருத்துவச் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் வந்தவா்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனா்.

புதுச்சேரியைச் சோ்ந்தவா்கள் அதற்கான ஆதாரத்தைக் காண்பித்தாலும், உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டனா். மற்றவா்கள் அனுமதிக்கப்படவில்லை.

இதனிடையே, சென்னையில் வருகிற 19-ஆம் தேதி முதல் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட உள்ளதால், அங்கிருந்து புதுச்சேரியைச் சோ்ந்தவா்கள் கோரிமேடு, கனகசெட்டிக்குளம் வழியாக புதுச்சேரிக்கு வந்து கொண்டிருக்கின்றனா். இவா்கள் ‘இ - பாஸ்’, ஆதாா் அட்டை வைத்திருந்தாலும், பல்வேறு விசாரணை, பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.

மேலும், பொது முடக்கத் தளா்வு அறிவிக்கப்பட்டபோது எல்லைகளில் அகற்றப்பட்ட தற்காலிக முகாம்களை போலீஸாா் மீண்டும் அமைத்து வருகின்றனா். இந்தக் கட்டுப்பாடுகள் வியாழக்கிழமையிலிருந்து (ஜூன் 18) மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com