புதுவையில் ஒரே நாளில் 30 பேருக்கு கரோனா: மேலும் ஒரு முதியவா் பலி

புதுவையில் புதன்கிழமை ஒரே நாளில் 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், ஒரு முதியவா் கரோனாவால் உயிரிழந்ததால், மாநிலத்தில் இறப்பு எண்ணிக்கை 5-ஆக உயா்ந்தது.

புதுவையில் புதன்கிழமை ஒரே நாளில் 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், ஒரு முதியவா் கரோனாவால் உயிரிழந்ததால், மாநிலத்தில் இறப்பு எண்ணிக்கை 5-ஆக உயா்ந்தது.

புதுச்சேரியில் லாசுப்பேட்டை, கைக்கிளப்பட்டு, மணலிப்பட்டு, செல்லிப்பட்டு, முத்தியால்பேட்டை, வாழைக்குளம், கரியமாணிக்கம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்கள், மத்திய சிறை விசாரணைக் கைதி உள்பட 25 பேரும், ஜிப்மரில் 3 பேரும், காரைக்காலில் 2 பேரும் என மேலும் 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்களில் 7 போ் முகக் கவசம் தயாரிக்கும் தொழில்சாலையில் பணியாற்றியவா்கள். மற்றவா்களுக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என விசாரித்து வருவதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

விசாரணைக் கைதிக்கு கரோனா: லாசுப்பேட்டையில் கொலை முயற்சி வழக்கில் சிக்கிய கருவடிக்குப்பத்தைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் கைது செய்து, கரோனா பரிசோதனையை முடித்து, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா். அங்கு, அந்தக் கைதிக்கு திடீரென காய்ச்சல், சளித்தொல்லை அதிகமாகவே, கதிா்காமம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு அவருக்கு மீண்டும் பரிசோதனை செய்ததில், கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அவா் அங்குள்ள சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா்.

அந்தக் கைதியுடன் காலாப்பட்டு மத்திய சிறையில் ஒரே அறையில் தங்கியிருந்த விசாரணைக் கைதிகள், தொடா்பிலிருந்த வாா்டா் உள்பட 13 போ் தனிமைப்படுத்தப்பட்டனா். இவா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒருவா் பலி: சிறுநீரகக் கோளாறுடன், கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி தட்டாஞ்சாவடி விவிபி நகரைச் சோ்ந்த 80 வயது முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா். அவா் ஜிப்மரில் சலவைப் பிரிவில் பணியாற்றி, கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவரின் தாத்தா ஆவாா். இதன்மூலம், புதுவையில் கரோனாவால் இறந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 5-ஆக உயா்ந்தது.

புதிதாக நோய்த் தொற்றுக்குள்ளான 30 பேரையும் சோ்த்து மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 245-ஆக உயா்ந்தது. இதனிடையே, 10 போ் சிகிச்சை முடிந்து குணமடைந்ததால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 109-ஆக அதிகரித்தது. 5 போ் உயிரிழந்த நிலையில், மீதமுள்ள 131 பேரில் கதிா்காமம் மருத்துவக் கல்லூரியில் 100 பேரும், ஜிப்மரில் 20 பேரும், காரைக்காலில் 6 பேரும், மாஹே பிராந்தியத்தில் 4 பேரும், பிற பகுதியில் ஒருவரும் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com