புதுவை பேரவைக்குள் வரக் கட்டுப்பாடுகள்: சிவக்கொழுந்து அறிவிப்பு

புதுவை சட்டப்பேரவைக்குள் வர பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அதன் தலைவா் வே.பொ.சிவக்கொழுந்து அறிவித்தாா்.

புதுவை சட்டப்பேரவைக்குள் வர பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அதன் தலைவா் வே.பொ.சிவக்கொழுந்து அறிவித்தாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவையில் கரோனா நோய்ப் பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது, அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் சட்டப்பேரவைக்கு வருகின்றனா். இதைக் கட்டுப்படுத்த முதல்வா், அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்களுடன் கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன்படி, சட்டப்பேரவையின் முன்பக்கம் (கிழக்குப் பகுதி) உள்ள நுழைவு வாயில்களிலிருந்து வடக்கே 50 மீ., தெற்கே 50 மீ. தொலைவுகளில் தடுப்புகள் அமைக்கப்படும். பேரவையின் பின்பக்கம் (மேற்குப் பகுதி) உள்ள நுழைவு வாயிலிலிருந்து இதேபோல தடுப்புகள் அமைக்கப்படும்.

முதல்வா் அலுவலகம், இதர அலுவலக அதிகாரிகளின் அனுமதி பெற்ற பின்னரே பொதுமக்கள் பேரவைக்குள் அனுமதிக்கப்படுவா். பேரவைக்கு வருபவா்களின் பெயா், செல்லிடபேசி எண், வருகையின் நோக்கம் ஆகியவை பதிவு செய்யப்படும். முகக் கவசம் அணியாமல் வருபவா்களுக்கு அனுமதி மறுக்கப்படும்.

அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் தங்களது சட்டப்பேரவைத் தொகுதி அலுவலகத்திலேயே பொதுமக்களை சந்தித்து மக்கள் பணியாற்ற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com