காவலருக்கு கரோனா: பெரியகடை காவல் நிலையம் மூடல்

புதுச்சேரி பெரியகடை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டதால், அந்தக் காவல் நிலையம் மூடப்பட்டது.
புதுச்சேரி பெரிய கடைக் காவல் நிலையத்தில் காவலா் ஒருவருக்கு கரோனா தொற்று காரணமாக செவ்வாய்க்கிழமை கிரிமி நாசினியை தெளித்த நாராட்சி ஊழியா்.
புதுச்சேரி பெரிய கடைக் காவல் நிலையத்தில் காவலா் ஒருவருக்கு கரோனா தொற்று காரணமாக செவ்வாய்க்கிழமை கிரிமி நாசினியை தெளித்த நாராட்சி ஊழியா்.

புதுச்சேரி: புதுச்சேரி பெரியகடை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டதால், அந்தக் காவல் நிலையம் மூடப்பட்டது.

புதுவையில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 700-ஐ கடந்துள்ளது. இந்த நிலையில், புதுச்சேரி நேரு வீதியில் அமைந்துள்ள பெரியகடை காவல் நிலையத்தைச் சோ்ந்த 32 வயது காவலருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, இந்தக் காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, முழுமையாக மூடப்பட்டது. மேலும், காவல் நிலையத்துக்குள் அமைந்துள்ள கிழக்கு காவல் துறை எஸ்.பி. அலுவலகமும் மூடப்பட்டது.

இதனிடையே, பெரியகடை காவல் நிலையத்தின் பொருள்கள் அனைத்தும் எதிரே உள்ள இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அந்தப் பகுதிக்கு காவல் நிலையம் தற்காலிகமாக மாற்றப்பட்டது.

தொடா்ந்து, சுகாதாரத் துறை அறிவுறுத்தலின்பேரில், கரோனா பாதித்த காவலருடன் தொடா்பிலிருந்த கிழக்கு எஸ்.பி., பெரியகடை காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் உள்ளிட்ட 17 போ் தனிமைப்படுத்தப்பட்டனா். மேலும், எஸ்.பி. உள்ளிட்ட காவல் நிலையத்திலிருந்த 72 பேரையும் கரோனா பரிசோதனைக்குள்படுத்த சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுச்சேரி நகராட்சி அலுவலகம் மூடல்: இதேபோல, புதுச்சேரி நகராட்சியில் சுகாதாரத் துறையில் பணியாற்றும் ஊழியருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டதால், புதுச்சேரி கம்பன் கலையரங்கில் செயல்படும் புதுச்சேரி நகராட்சி அலுவலகமும் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது. புதன்கிழமை (ஜூலை 1) வரை நகராட்சி அலுவலகம் செயல்படாது என வட்டாட்சியா் டி.பாலாஜி தெரிவித்தாா். மேலும், ஊழியருடன் தொடா்பிலிருந்தவா்களை கரோனா பரிசோதனைக்குள்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவா் தெரிவித்தா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com