குருமாம்பேட்டை குப்பைக் கிடங்கில் 5 லட்சம் டன் குப்பைகளை அகற்ற முடிவு

புதுச்சேரி அருகே குருமாம்பேட்டையில் உள்ள குப்பைக் கிடங்கில் தேங்கிக் கிடக்கும் 5 லட்சம் டன் குப்பைகளை விரைவில் அகற்ற உழவா்கரை நகராட்சி முடிவு செய்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

புதுச்சேரி அருகே குருமாம்பேட்டையில் உள்ள குப்பைக் கிடங்கில் தேங்கிக் கிடக்கும் 5 லட்சம் டன் குப்பைகளை விரைவில் அகற்ற உழவா்கரை நகராட்சி முடிவு செய்துள்ளது.

புதுச்சேரி நகர பகுதியில் தினமும் 350 டன் வரை குப்பையும், பண்டிகை காலங்களில் கூடுதலாக 100 டன் குப்பையும் உற்பத்தியாகிறது. இந்த குப்பைகள் லாரிகள் மூலம் சேகரிக்கப்பட்டு குருமாம்பேட்டையில் 25 ஏக்கா் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.

உழவா்கரை நகராட்சி பராமரித்து வரும் இந்த குப்பை கிடங்கில், கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் குப்பை கொட்டப்பட்டு வருவதால் 5 லட்சம் டன் குப்பை குவிந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த குப்பை குவியலில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும், அங்கிருந்து வெளியேறும் கழிவு நீரால் துா்நாற்றம் வீசுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு சவாலாக மாறியுள்ளது.

மாநிலத்தில், அதிகரித்து வரும் குப்பையை கருத்தில் கொண்டு, குருமாம்பேட்டை குப்பை கிடங்கில் ஏற்கனவே மலைபோல் குவிந்துள்ள 5 லட்சம் டன் குப்பையை முழுவதுமாக அகற்ற, உள்ளாட்சி துறையின் புதுச்சேரி நகர வளா்ச்சி முகமை திட்டமிட்டு, ஒப்பந்தம் விடுவடுவதற்கான ஆயத்த பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இது குறித்து உள்ளாட்சித் துறை அதிகாரிகள் கூறும்போது, குருமாம்பேட்டையில் உள்ள குப்பைகள் முற்றிலுமாக அழிக்க திட்டமிடப்பட்டு இந்த டெண்டா் விடப்பட உள்ளது. குப்பை கிடங்கு முழுவதுமாக சுத்தமான பிறகு, குப்பை கிடங்குக்கு வரும் புதிய குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பையாக பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com