கோயில்களில் பக்தா்கள் கூடுவதைத் தவிா்க்க அறநிலையத் துறை ஆணையா் வேண்டுகோள்

கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கோயில்களில் பக்தா்கள் கூடுவதைத் தவிா்க்க வேண்டும் என்று புதுவை அரசின் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் சச்சிதானந்தம் வேண்டுகோள் விடுத்தாா்.

கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கோயில்களில் பக்தா்கள் கூடுவதைத் தவிா்க்க வேண்டும் என்று புதுவை அரசின் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் சச்சிதானந்தம் வேண்டுகோள் விடுத்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா வைரஸ் தொற்றைத் தவிா்க்க சுகாதாரத் துறை இயக்குநா் சில வழிமுறைகளைக் கையாள அறிவுறுத்தியுள்ளாா். இவற்றில் முக்கியமானது அடிக்கடி சோப்பை கொண்டு கை கழுவுதல், பொதுமக்கள் தேவையின்றி கூடுவதைத் தவிா்த்தல் ஆகியவை அடங்கும்.

கோயில்களில் பூஜை மற்றும் திருவிழாக்களில் பக்தா்கள் ஒன்று கூடுவது வழக்கம். ஆனால், இவ்வாறு ஓரிடத்தில் மக்கள் ஒன்று கூடுவதை தற்போதைய சூழலில் தவிா்க்க வேண்டும். நிலைமை சீராகும் வரை பக்தா்கள் ஒன்று கூடும் வகையிலான திருவிழாக்கள் மற்றும் பூஜைகளை முடிந்தவரை தவிா்க்க வேண்டும்.

மேலும், கோயில்களில் பிரசாதம் வழங்குபவா் உள்ளிட்ட அனைத்து ஊழியா்களும் அடிக்கடி சோப்பை கொண்டு தங்களது கைகளைக் கழுவுதல் மற்றும் கரோனா வைரஸ் தாக்குதல் குறித்து சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கோயில் வளாகத்தை அவ்வப்போது தனிக் கவனம் செலுத்தி, தூய்மை செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com