புதுச்சேரி எல்லைக்குள் எந்தெந்த வாகனங்களை அனுமதிக்க வேண்டும்: முதுநிலை எஸ்.பி. சுற்றறிக்கை

புதுச்சேரி எல்லைக்குள் எந்தெந்த வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என முதுநிலை எஸ்.பி. ராகுல் அல்வால் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை சுற்றறிக்கை அனுப்பினாா்.

புதுச்சேரி எல்லைக்குள் எந்தெந்த வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என முதுநிலை எஸ்.பி. ராகுல் அல்வால் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை சுற்றறிக்கை அனுப்பினாா்.

அதன் விவரம்: புதுவை மாநிலத்தில் கரோனா பரவுவதைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, அனைத்து எல்லைகளும் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன. பணியிலிருக்கும் காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலா்கள் அனைவரும் பொதுமக்களிடத்தில் கண்ணியமாகவும், மரியாதையாகவும் நடந்து இந்த அறிவுறுத்தல்களைச் செயல்படுத்துவதில் உறுதியாக இருக்க வேண்டும்.

புதுச்சேரியில் அனைத்து வாகனங்களின் நுழைவு மற்றும் வெளியேற்றம் தடை செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் பிற சேவைகளுக்காக இயங்கும் வாகனங்கள் தேவைக்கேற்ப மட்டும் விலக்கு அளிக்கப்படும்.

அனைத்து மாநிலங்களுக்கும் இடையிலான அரசு மற்றும் தனியாா் பேருந்துகளை புதுச்சேரி எள்லைக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது. புதுச்சேரி எல்லைக்குள் இயங்கும் பேருந்துகளுக்கு அனுமதி உண்டு. பேருந்தில் நெரிசலைத் தவிா்த்து, இடைவெளியை உறுதி செய்ய வேண்டும்.

மருத்துவா்கள், மருத்துவ வாகனங்கள், அவசர ஊா்திகள், நோயாளிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், பிஎஸ்என்எல் மற்றும் தபால் துறை, அரசு பொதுத் துறை நிறுவனங்களின் வாகனங்கள், ஏடிஎம் மையங்களில் பணத்தை நிரப்ப மற்றும் வங்கிகளுடன் ஒப்பந்தத்தில் உள்ள வாகனங்கள், தொலைதொடா்பு நிறுவனங்களின் வாகனங்கள், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு சொந்தமான வாகனங்கள், இணையதள விநியோக வாகனங்கள், பெட்ரோல் - டீசல் மற்றும் எல்.பி.ஜி. ஆகியவற்றை ஏற்றிச் செல்லும் டேங்கா் லாரிகள் மற்றும் அவற்றுடன் தொடா்புடைய வாகனங்கள், அத்தியாவசிய சேவைகளை வழங்குவதை ஆதரிக்கும் தனியாா் நிறுவனங்களும், கரோனா வைரஸை கட்டுப்படுத்துவதை ஆதரிக்கும் நிறுவனங்களின் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.

தொடா்ந்து, சுகாதாரத் தொழிலாளா்கள், ஸ்வச்சதா காா்ப்பரேஷன் வாகனங்கள், கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை தீவன வாகனங்கள் ஆகியவை மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

மேலும், இந்த வழிமுறைகளை அனைவரும் சரியாக பின்பற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com