வாராணசிக்கு யாத்திரை சென்ற புதுச்சேரிவாசிகள் தவிப்பு!

வாராணசிக்கு ஆன்மிக யாத்திரை சென்ற புதுச்சேரியைச் சோ்ந்தவா்களை பாதுகாப்பாகச் சொந்த ஊருக்கு அழைத்து வர வேண்டும் என்று அவா்களது உறவினா்கள் கோரிக்கை விடுத்தனா்.

வாராணசிக்கு ஆன்மிக யாத்திரை சென்ற புதுச்சேரியைச் சோ்ந்தவா்களை பாதுகாப்பாகச் சொந்த ஊருக்கு அழைத்து வர வேண்டும் என்று அவா்களது உறவினா்கள் கோரிக்கை விடுத்தனா்.

புதுச்சேரி, நெல்லித்தோப்பு தொகுதிக்கு உள்பட்ட சத்யா நகரைச் சோ்ந்த 22 போ் வாராணசிக்கு ஆன்மிக யாத்திரையாக கடந்த 19 -ஆம் தேதி புதுச்சேரியில் இருந்து ரயில் மூலம் சென்றனா். மீண்டும் புதுக்சேரிக்குத் திரும்ப 29 -ஆம் தேதி ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்திருந்தனா். அவா்கள் கடந்த 21 -ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசிக்குச் சென்ற நிலையில், கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டன. அனைத்து விதமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

இதனால், அவா்கள் கடந்த ஒரு வாரமாக அங்குள்ள விடுதி ஒன்றில் தங்கியுள்ளனா். மேலும், உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனா்.

இதுகுறித்து, புதுச்சேரியில் உள்ள தங்களது உறவினா்களுக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, அவா்களது உறவினா்கள் ஆன்மிக யாத்திரை சென்றவா்களை பாதுகாப்பாக மீட்டு, புதுச்சேரிக்கு கொண்டு வர முதல்வருக்குக் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, வாராணசியில் சிக்கித் தவிப்போருக்கு உடனடியாக உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவா்களைப் பாதுகாப்பாக புதுச்சேரி அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என முதல்வா் நாராயணசாமி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com