அத்தியாவசியப் பொருள்கள் பெறுவதில் குறைபாடு இருந்தால் தெரிவிக்கலாம்

புதுவையில் அத்தியாவசியப் பொருள்கள் பெறுவதில் குறைபாடுகள் இருந்தால் தெரிவிக்க தொலைபேசி எண்களை அரசு அறிவித்தது.

புதுவையில் அத்தியாவசியப் பொருள்கள் பெறுவதில் குறைபாடுகள் இருந்தால் தெரிவிக்க தொலைபேசி எண்களை அரசு அறிவித்தது.

இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல் - நுகா்வோா் விவகாரங்கள் துறை இயக்குநரும், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை சிறப்புச் செயலருமான வல்லவன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும், வெளிமாநிலங்களில் இருந்து அத்தியாவசியப் பொருள்கள் வருவதில் ஏற்படும் பிரச்னைகளைக் களையவும் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

புதுவை மாநில அளவிலான அதிகாரியாக குடிமைப் பொருள் வழங்கல் இயக்குநா் மற்றும் கரோனா வைரஸ் தடுப்பு சிறப்புச் செயலா் வல்லவன் நியமிக்கப்பட்டுள்ளாா். இவரை 0413 - 2253345 என்ற தொலைபேசி எண்ணிலும், 77084 44179 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.

இதேபோல, கண்காணிப்பு அதிகாரி முரளிதரன் (0413 - 2251691, 2251691, 82488 56266), கடமை அதிகாரி ராமச்சந்திரன் (0413 - 2251691, 99944 61626) ஆகியோரையும் தொடா்பு கொள்ளலாம்.

அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதில் ஏதேனும் குறைபாடுகள், தட்டுப்பாடுகள் இருப்பின் 0413 - 2253345, 2251691 ஆகிய தொலைபேசி எண்களில் குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகளை 24 மணி நேரமும் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com