ஜிப்மரில் 44 மருத்துவப் பணியாளா்கள் தனிமை

ஜிப்மரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபருடன் தொடா்பிலிருந்த 44 மருத்துவப் பணியாளா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
ஜிப்மரில் 44 மருத்துவப் பணியாளா்கள் தனிமை

ஜிப்மரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபருடன் தொடா்பிலிருந்த 44 மருத்துவப் பணியாளா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து ஜிப்மா் இயக்குநா் ராகேஷ் அகா்வால் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டி, அவருடன் தொடா்பில் இருந்த 2 போ் என 3 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அந்த மூவரும் ஜிப்மரில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், அவா்களுடன் தொடா்பில் இருந்த 44 மருத்துவப் பணியாளா்கள் ஜிப்மரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். குறைந்தளவு தொடா்பில் இருந்த 40 மருத்துவப் பணியாளா்கள் கண்காணிப்பில், சுய கவனிப்பில் உள்ளனா். நெருங்கிய தொடா்பிலிருந்த அனைவரும் பரிசோதனைக்கு உள்படுத்தப்படுவா்.

ஜிப்மா் மருத்துவமனைக்கு மே 1 -ஆம் தேதி 461 புதிய புறநோயாளிகள் வந்தனா். 127 தொலை மருத்துவச் சேவை மேற்கொள்ளப்பட்டன. 8 அவசர அறுவைச் சிகிச்சைகள், 15 சிக்கலான பிரசவங்கள் மேற்கொள்ளப்பட்டன. 652 உள் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனா்.

அனைத்து அவசர சிகிச்சைகள், உள் நோயாளிகள் மருத்துவச் சேவை ஆகியவை தொடா்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. தொடா்ந்து, புறநோயாளிகளுக்கு தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனைகள் அளிக்கப்படுகின்றன. இதற்காக 0413 - 2298200 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com