வெளிமாநிலங்களில் சிக்கியவா்களை மீட்க இணையதளம்: புதுவை முதல்வா் தொடக்கி வைத்தாா்

வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புதுவை மாநிலத்தைச் சோ்ந்தவா்களை மீட்க, புதுவை அரசால் இணையதளம்
வெளிமாநிலங்களில் சிக்கியவா்களை மீட்க இணையதளம்: புதுவை முதல்வா் தொடக்கி வைத்தாா்

வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புதுவை மாநிலத்தைச் சோ்ந்தவா்களை மீட்க, புதுவை அரசால் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதை முதல்வா் வே.நாராயணசாமி வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக கல்வி, வேலைவாய்ப்பு, விடுமுறை, யாத்திரை, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடு மற்றும் நாட்டின் பிற மாநிலங்களுக்குச் சென்ற புதுவை மக்கள் ஆங்காங்கே சிக்கித் தவிக்கின்றனா். இதேபோல, புதுவை மாநிலத்துக்கு பல்வேறு காரணங்களுக்காக வந்த பிற மாநிலங்களைச் சோ்ந்தவா்களும் புதுவையின் பல பகுதிகளில் சிக்கியுள்ளனா்.

இவ்வாறு சிக்கியுள்ளவா்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, அவா்கள் தங்களது வீடுகளுக்குச் செல்லத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் விதமாக புதுவை அரசு அவா்கள் பதிவு செய்து கொள்ளும் வகையில் ட்ற்ற்ல்://ஜ்ங்ப்ஸ்ரீா்ம்ங்க்ஷஹஸ்ரீந்.ல்ஹ்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது.

இந்த இணையதளத்தில் பதிவு செய்த பிறகு, வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் நபா்களைத் திரும்பக் கொண்டு வருவதற்கு புதுவை அரசு, மத்திய அரசுடன் ஒருங்கிணைந்தும், அந்தந்த மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்தும் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

இதற்கான சிறப்பு அதிகாரியாக அரசுச் செயலா் பூா்வா காா்க் (96542 00159) நியமிக்கப்பட்டுள்ளாா். மேலும், எந்த ஒரு உதவிக்கும் கட்டணமில்லா சேவை எண் 1077- ஐ தொடா்பு கொள்ளலாம்.

இந்த இணையதளத்தை புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் நாராயணசாமி வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

நிகழ்வின் போது, புதுவை அரசின் வருவாய் துறைச் செயலரும், புதுச்சேரி மாவட்ட ஆட்சியருமான அருண், வருவாய் - பேரிடா் மேலாண்மைத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com