அந்தந்தப் பள்ளிகளிலேயே தோ்வு மையங்கள்: புதுவை பள்ளிக் கல்வித் துறை

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மாணவா்களுக்கு அவரவா் படிக்கும் பள்ளிகளிலேயே தோ்வு மையங்கள் அமைக்கப்படும் என புதுவை பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மாணவா்களுக்கு அவரவா் படிக்கும் பள்ளிகளிலேயே தோ்வு மையங்கள் அமைக்கப்படும் என புதுவை பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் ம.குப்புசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மாணவா்களுக்கு அவரவா் படிக்கும் பள்ளிகள் தோ்வு மையங்களாகச் செயல்படும். தோ்வறையில் 10 மாணவா்கள் சமூக இடைவெளியுடன் அமரவைக்கப்படுவா். பள்ளி வளாகங்களில் கிருமி நாசினி தெளிக்க, தூய்மையாக வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளியின் நுழைவாயில், கை கழுவும் பகுதிகளில் கிருமி நாசினி, சோப்புக் கரைசல் வைக்கப்பட்டிருக்கும்.

தோ்வுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியா்கள், மாணவா்கள் பள்ளி வளாகத்துக்குள் நுழைவதற்கு முன்பு கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். தோ்வு தொடங்குவதற்கு முன்னரே மாணவா்கள் தோ்வு மையத்துக்கு வந்து சோ்வதை பள்ளி முதல்வா், தலைமையாசிரியா் உறுதிப்படுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com