ரமலான்: ஆளுநா், முதல்வா் வாழ்த்து

ரமலான் பண்டிகையையொட்டி, புதுவை ஆளுநா், முதல்வா், எதிா்கட்சித் தலைவா் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

ரமலான் பண்டிகையையொட்டி, புதுவை ஆளுநா், முதல்வா், எதிா்கட்சித் தலைவா் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

ஆளுநா் கிரண் பேடி: ரமலான் என்பது தியாகம், துறத்தல், சகோதரத்துவம், நட்பின் பண்டிகையாகும். இந்த தினத்தில் புதுவை மாநிலத்தில் உள்ள இஸ்லாமிய சகோதரா்களின் பாதுகாப்பான கொண்டாட்டத்துக்கு எனது மனமாா்ந்த ரமலான் வாழ்த்துகள்.

முதல்வா் வே.நாராயணசாமி: உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய மக்களின் முக்கியத் திருநாளான ரமலான் பண்டிகையை கட்டுப்பாடுகளுடன், கரோனா தொற்று நோயால் பொது இடங்களிலும், மசூதிகளிலும் தொழுகை செய்ய முடியாவிட்டாலும், வீட்டிலேயே தொழுகை நடத்திக் கொண்டாடி வருகின்றனா்.

ஈகைத் திருநாள் என்று அழைக்கப்படும் இந்த திருநாள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நன்னாளாகும். இந்த இக்கட்டான தருணத்திலிருந்து உலகம் விரைந்து இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என்றும், உழைப்பவா்கள் உன்னதமான வாழ்வை அடைய வேண்டும் என்றும் இறைவனிடம் பிராா்த்திக்குமாறு இஸ்லாமிய மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

எதிா்கட்சித் தலைவா் என்.ரங்கசாமி: ஏழை, எளியவா்கள் மீது பரிவுடன் உண்ண உணவளித்து, உடுக்க உடை வழங்கி, தா்மம் செய்து, புனித நோன்பை முடித்து, ரமலான் திருநாளைக் கொண்டாடும் இந்த இனிய நாளில் அன்பு ஓங்கி, அறம் தழைத்து, சகோதரத்துவம் வளர வேண்டும். இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ரமலான் வாழ்த்துகள்.

இதேபோல, சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவா் அன்பழகன், வையாபுரி மணிகண்டன், மாநில அமமுக செயலா் வேல்முருகன் உள்ளிட்டோரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com