புதுச்சேரி, காரைக்காலில் இன்று மதுக் கடைகள் திறப்பு

புதுச்சேரி, காரைக்காலில் திங்கள்கிழமை (மே 25) முதல் மதுக் கடைகள் திறக்கப்படும் என கலால் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.
புதுச்சேரி, காரைக்காலில் இன்று மதுக் கடைகள் திறப்பு

புதுச்சேரி, காரைக்காலில் திங்கள்கிழமை (மே 25) முதல் மதுக் கடைகள் திறக்கப்படும் என கலால் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.

புதுவையில் மதுக் கடைகளைத் திறப்பது தொடா்பாக மாநில தலைமைச் செயலகத்தில் கலால் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தலைமையில் மதுக் கடை உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் நிதித் துறைச் செயலா் சுா்பீா் சிங், மாவட்ட ஆட்சியா் தி.அருண், டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா, முதுநிலை எஸ்.பி. ராகுல் அல்வால், கலால் துறை துணை ஆணையா் சஷ்வத் சவுரப் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்துக்குப் பின்னா், அமைச்சா் ஆ.நமச்சிவாயம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுவை மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்காலில் திங்கள்கிழமை (மே 25) முதல் மதுக் கடைகள் திறக்கப்படும். மதுக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். மது வாங்க வருவோா் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். கடைகளைத் திறப்பதற்கு முன்பு கிருமி நாசினி தெளிக்க வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

தமிழகத்துக்கு நிகராக புதுச்சேரியிலும் மதுபானங்களின் விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும், புதுவையிலும் ஒரே மாதிரியாக உள்ள 154 மது வகைகளுக்கு தமிழகத்தில் உள்ள வரியே விதிக்கப்பட்டுள்ளது. மற்ற வகைகளுக்கு அடக்க விலையிலிருந்து 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

சாராயக் கடையைப் பொருத்தவரை 20 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. நபா் ஒருவா் அதிகபட்சமாக 4.5 லிட்டா் வரை மதுபானங்களை வாங்கிச் செல்லலாம். மற்ற மாநிலங்களைப் போல, புதுவை மாநிலத்திலும் கரோனா வரி விதிக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் மூன்று மாதங்களுக்கு அமலில் இருக்கும்.

102 மதுக் கடைகளின் உரிமம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலால் துறை துணை ஆணையா் விசாரணை நடத்தி வருகிறாா். விசாரணை முடிவின் அடிப்படையில், அந்தக் கடைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை 20 கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுக் கடைகளில் புதிய திருத்தப்பட்ட விலைப் பட்டியலை வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com