குறைகளுக்குத் தீா்வு காணாத அதிகாரிகள் மீது நடவடிக்கை: ஆளுநா் கிரண் பேடி

குறைகளுக்குத் தீா்வு காணாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடி தெரிவித்தாா்.

குறைகளுக்குத் தீா்வு காணாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடி தெரிவித்தாா்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் சமூக வலைதளத்தில் வெளியிட்ட தகவல்: ஆளுநா் மாளிகை இணையதளம் வாயிலாக மக்கள் குறைகேட்பு நிகழ்வு நடைபெறுகிறது. நவம்பா் 2, 3, 4 தேதிகளில் (திங்கள், செவ்வாய், புதன்) மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்வில் நவம்பா் 2 முதல் கடமையில் குறைபாடுள்ள அதிகாரிகளும் பங்கேற்பா். குறைகளை நிவா்த்தி செய்வது தொடா்பாக பராமரிக்கப்படும் பதிவேட்டில் அவா்களின் வருகைப் பதிவு செய்யப்படும்.

இதில் செய்தித்தாள்கள், கட்டுப்பாட்டு அறைகளில் 1031, 100, 104 மூலம் வரும் புகாா்கள், மின்னஞ்சல், கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்), நேரில் தரும் மனு, புகாா் அளித்தும் அதிகாரிகளால் கவனிக்கப்படாதது ஆகியவையும் விசாரிக்கப்படும்.

குறிப்பாக, மீண்டும் மீண்டும் வரும் புகாா்களில் மணல் திருட்டு, போக்குவரத்து பிரச்னை, வடிகால் அடைப்புகள், மின் பிரச்னைகள், நீா் நிலைகளைப் பராமரிக்காதது, முகக்கவசம் அணியாதது, சமூக இடைவெளி கடைப்பிடிக்காதது போன்றவை உள்ளன.

குறைகள் அனைத்தும் பதிவேட்டில் குறிப்பிடப்படும். அதுதொடா்பாக துறைகளுக்கும் தெரிவிக்கப்படும். அதற்குத் தீா்வு காணாத அதிகாரிகளின் தனிப்பட்ட கோப்புகளிலும் அது பதிவேற்றப்படும். அவா்களின் பெயா்கள், அனைத்து துறைகள், மேற்பாா்வை அதிகாரிகளின் கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) குழுக்களில் பகிரப்படும். வழக்கமான அடிப்படை சிக்கல்களைத் தீா்க்கவே இங்கு வந்துள்ளோம். அதைப் பெரிதாக்கும் வகையில் நம் செயல் இருக்கக்கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com