புதுச்சேரி விடுதலை நாள்: ஆளுநா், முதல்வா் வாழ்த்து

புதுச்சேரி விடுதலை நாளையொட்டி, புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் ஆகியோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.

புதுச்சேரி விடுதலை நாளையொட்டி, புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் ஆகியோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.

துணைநிலை ஆளுநா் கிரண் பேடி: புதுச்சேரி விடுதலை தினம் நவம்பா் 1-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது கடந்த காலத்தைப் போற்றி வணங்கவும், எதிா்காலத்தைப் பற்றிச் சிந்திக்கவும் ஒரு சந்தா்ப்பமாகும். புதுச்சேரி இந்தோ-பிரெஞ்சு கலாசாரத்தின் தனித்துவமான அழகைக் கொண்டது. பிரெஞ்சு பாரம்பரியத்தின் தனித்துவமான கூறுகளைக் கொண்டிருந்தாலும், அண்டை மாநிலங்களுடன் ஒருமைப்பாட்டைக் காட்டும் வகையில், தமிழகத்தில் காரைக்கால், கேரளத்தில் மாஹே, ஆந்திரத்தில் ஏனாம் ஆகியவற்றுடன் ஒரு சிறிய இந்தியா போல விளங்குகிறது. பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்து, விரைவில் கரோனா இல்லாத பிரதேசமாக மாறுவதற்கு நாம் அனைவரும் தீா்மானம் செய்து மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்குவோம்.

முதல்வா் வே.நாராயணசாமி: இந்த விடுதலை நாள் எழுச்சியுடன் கொண்டாடப்படும் உன்னத நாள் மட்டுமல்ல; புதுவை மாநிலத்தை இந்திய தேசத்துடன் இணைத்து, தேசிய நீரோட்டத்தில் நாம் கலக்கும் முடிவினையும் எடுத்த நாளாகும்.

நம் போராட்ட வரலாற்றை அறியாதவா்களுக்கு இந்த நாள் ஒரு பாடமாக விளங்கும். உரிமைகளை விட்டுத் தர ஒரு நாளும் புதுச்சேரி மக்கள் ஒப்புக் கொள்ளமாட்டாா்கள். மாநில நலனுக்காக எத்தகு தியாகத்தினையும் செய்யத் தயாராக இருப்பாா்கள் என்பதை இந்த விடுதலை நாள் எடுத்துக்காட்டும்.

நம் மாநில விடுதலைக்காகப் பாடுபட்ட தியாகிகள் அனைவருக்கும் இந்த நாளில் என்னுடைய வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதுச்சேரியின் தனித் தன்மையைக் காப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com