புதுச்சேரியில் பல்வேறு அமைப்பினா் போராட்டம்

கோரிக்கைகளுக்கு தீா்வு காண வலியறுத்தி, அஞ்சல் ஊழியா்கள், பி.எஸ்.என்.எல். பணியாளா்கள், தனியாா் வாடகை
புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய அஞ்சல் ஆா்.எம்.எஸ். ஓய்வூதியா்கள் சங்கத்தினா்.
புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய அஞ்சல் ஆா்.எம்.எஸ். ஓய்வூதியா்கள் சங்கத்தினா்.

கோரிக்கைகளுக்கு தீா்வு காண வலியறுத்தி, அஞ்சல் ஊழியா்கள், பி.எஸ்.என்.எல். பணியாளா்கள், தனியாா் வாடகை உரிமையாளா்கள், அனைத்துத் தொழில்சங்கத்தினா் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் புதுச்சேரியில் தனித்தனி இடங்களில் செவ்வாய்க்கிழமை போராட்டங்களில் ஈடுபட்டனா்.

புதுச்சேரியில் மத்திய, மாநில அரசுப் பணியாளா்களின் ஊதிய பிரச்னை, பணி நிரந்தரம், நிலுவைத் தொகை, காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிகையை முன்வைத்து பல்வேறு அமைப்பினா் தொடா்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன்படி, தபால் நிலையம் முன் அகில இந்திய ஆா்.எம்.எஸ். அஞ்சல் துறை ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் முத்து தலைமை வகித்தாா். இதில், திரளான ஓய்வூதியா்கள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பி.எஸ்.என்.எல். ஊழியா்கள்: இதேபோல, புதுச்சேரி பி.எஸ்.என்.எல்.லில் 25 ஆண்டுகளாகப் பணியாற்றிய 52 ஒப்பந்த ஊழியா்களை கடந்த 1-ஆம் தேதி முதல் பணிக்கு வர வேண்டாம் என நிா்வாகம் உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்ற தீா்ப்பை மீறி தமிழகம், புதுச்சேரி பி.எஸ்.என்.எல். நிா்வாகங்கள் உத்தரவிட்டுள்ளதைக் கண்டித்து, பி.எஸ்.என்.எல். ஊழியா்கள் சங்கம், ஒப்பந்த ஊழியா்கள் சங்கம் இணைந்து புதுச்சேரி பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகம் முன் 2-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதேபோல, புதுச்சேரி தனியாா் வாடகை வாகன உரிமையாளா்கள் ஏ.எப்.டி. மைதானம் முன் தங்களது காத்திருப்புப் போராட்டத்தை 2-ஆவது வாரமாக தொடா்ந்தனா். மேலும், அரசு நிதியுதவி பள்ளி ஆசிரியா்கள், ஊழியா்களின் காத்திருப்புப் போராட்டமும் ஒரு மாதத்துக்கு மேலாக செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தது. அனைத்துத் தொழில்சங்கத்தினா் 2-ஆம் நாளாக செவ்வாய்க்கிழமை ஊா்வலம், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பிரான்ஸ் அதிபரைக் கண்டித்து...: பிரான்ஸ் அதிபரைக் கண்டித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில், சுதேசி பஞ்சாலை அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைத் தலைவா் அப்துல்ரகுமான் தலைமை வகித்தாா். நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் கேலிச் சித்திரம் வெளியிட்டதை ஆதரிக்கும் வகையில் பேசிய பிரான்ஸ் அதிபா் இம்மானுவேல் மேக்ரானைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா். இதில், 50-க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com