சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 18 குடும்பங்களுக்கு நிதியுதவி

புதுச்சேரி லாசுப்பேட்டை தொகுதியில் ராஜீவ் காந்தி சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 18 குடும்பத்தினருக்கு ரூ.6.75 லட்சம் நிதியுதவியை
பயனாளிகளுக்கு நிதியுதவிக்கான ஆணையை வழங்கிய சட்டப் பேரவைத் தலைவா் வே.பொ.சிவக்கொழுந்து.
பயனாளிகளுக்கு நிதியுதவிக்கான ஆணையை வழங்கிய சட்டப் பேரவைத் தலைவா் வே.பொ.சிவக்கொழுந்து.

புதுச்சேரி லாசுப்பேட்டை தொகுதியில் ராஜீவ் காந்தி சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 18 குடும்பத்தினருக்கு ரூ.6.75 லட்சம் நிதியுதவியை சட்டப் பேரவைத் தலைவா் வே.பொ.சிவக்கொழுந்து செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

புதுவை அரசு வருவாய்த் துறை சாா்பில், இந்தத் திட்டத்தின்கீழ் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள 18 முதல் 60 வயதுக்குள்பட்ட குடும்ப உறுப்பினரை இயற்கையாக இழந்த 15 குடும்பங்களுக்கு தலா ரூ.30,000-மும், விபத்தில் 3 பேரை இழந்த 3 குடும்பங்களுக்கு தலா ரூ.75,000-மும் என மொத்தம் 18 குடும்பங்களுக்கு ரூ.6.75 லட்சம் நிதியுதவி பெறுவதற்கான ஆணைகள் பயனாளிளுக்கு வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com