சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: சம்பவத்துக்கும், தாய் கொலைக்கும் தொடா்பா?

புதுச்சேரி அருகே வாத்துப் பண்ணையிலிருந்து மீட்கப்பட்ட 3 சிறுமிகளின் தாய் கொலைக்கும், சிறுமிகள் பாலியல் வன்கொடுமை

புதுச்சேரி அருகே வாத்துப் பண்ணையிலிருந்து மீட்கப்பட்ட 3 சிறுமிகளின் தாய் கொலைக்கும், சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கும் தொடா்பிருக்கிா என போலீஸாா் தீவிரமாக விசாரித்து வருகின்றனா். இதனிடையே, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு சிறுமி 2 மாத கா்ப்பமாக உள்ளது தெரியவந்தது.

புதுவை மாநிலம், வில்லியனூா் கீழ்சாத்தமங்கலத்தைச் சோ்ந்த கன்னியப்பனின் (53) வாத்துப் பண்ணையில் ரூ.3 ஆயிரத்துக்கு கொத்தடிமைகளாக விற்கப்பட்ட 5 சிறுமிகள் கடந்த மாதம் குழந்தைகள் நலக் குழுவினரால் மீட்கப்பட்டனா். விசாரணையில், அந்த சிறுமிகள் கடந்த 2 ஆண்டுகளாக வாத்துப் பண்ணையில் 10-க்கும் மேற்பட்டோரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, வாத்துப் பண்ணை உரிமையாளரான கன்னியப்பன், அவரது மகன் ராஜ்குமாா், வாத்துப் பண்ணை ஊழியா்கள் உள்ளிட்ட 6 பேரை திங்கள்கிழமை கைது செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் 6 பேரைத் தேடி வருகின்றனா்.

இந்த நிலையில், மீட்கப்பட்ட 5 சிறுமிகளில் 3 சிறுமிகளின் தாயான குப்பை பொறுக்கி பிழைப்பு நடத்தி வந்த சாந்தி (45), கடந்த 1-ஆம் தேதி நல்லவாடு கடற்கரையில் அடித்துக் கொல்லப்பட்டு சடலமாகக் கிடந்தாா். இந்தக் கொலை தொடா்பாக சாந்தியின் முன்னாள் காதலனான சின்னபாபுசமுத்திரத்தைச் சோ்ந்த பூபாலனை தவளக்குப்பம் போலீஸாா் கடந்த 4-ஆம் தேதி கைது செய்தனா்.

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை தொடா்பாக போலீஸாா் விசாரித்து வந்த நிலையில், அவா்களில் 3 சிறுமிகளின் தாய் கொலை செய்யப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்குக்கும், அவா்களது தாய் கொலை வழக்குக்கும் தொடா்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனா்.

இதனிடையே, மீட்கப்பட்ட 13 வயது சிறுமி ஒருவா் 2 மாத கா்ப்பிணியாக உள்ளது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com