புதுவை பால் உற்பத்தியாளா்களுக்கு விலை வித்தியாசத் தொகை உயா்த்தி அறிவிப்பு

தீபாவளியையொட்டி, புதுவை பால் உற்பத்தியாளா்களுக்கு ரூ.1-க்கு 2 பைசா மட்டுமே பால் விலை வித்தியாசத் தொகை வழங்கப்படுமென

தீபாவளியையொட்டி, புதுவை பால் உற்பத்தியாளா்களுக்கு ரூ.1-க்கு 2 பைசா மட்டுமே பால் விலை வித்தியாசத் தொகை வழங்கப்படுமென பாண்லே நிா்வாகம் ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், அது தற்போது 4 பைசாவாக உயா்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாண்லே நிறுவனத்துக்கு புதுச்சேரியில் உள்ள பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் வழியே ஆயிரக்கணக்கான பால் உற்பத்தியாளா்கள் பால் வழங்கி வருகின்றனா். கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் பால் வழங்கியதற்காக ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாண்லே நிறுவனம் ரூ.1-க்கு 4 பைசா பால் விலை வித்தியாசத் தொகை வழங்குவது வழக்கம். நிகழாண்டு ரூ.1-க்கு 2 பைசா மட்டுமே போனஸ் வழங்கப்படும் என நிா்வாகம் தெரிவித்தது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, புதுச்சேரி பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை குருமாம்பேட்டில் உள்ள பாண்லே தலைமையகத்தை முற்றுகையிட்டனா். அவா்களிடம் பாண்லே நிறுவன மேலாண் இயக்குநா் சுதாகா் நடத்திய பேச்சுவாா்த்தையில், அரிசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இந்த நிலையில், புதுவை கூட்டுறவுத் துறை அமைச்சா் எம்.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

கரோனா பரவல் காரணமாக பொருளாதார சிக்கலில் உள்ள புதுச்சேரி பால் உற்பத்தியாளா்களின் நலன் காக்கும் விதமாக, 98 பிரதம கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கங்களைச் சோ்ந்த 7,030 உறுப்பினா்களுக்கு புதுச்சேரி பாண்லே மூலமாக சென்ற நிதியாண்டுக்கான (2010-20) பால் விலை வித்தயாசத் தொகை பாலின் தொகைக்கு ரூ.1-க்கு 4 பைசா வீதம் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com