தேசிய பத்திரிகை தினம்: புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

தேசிய பத்திரிகை தினத்தையொட்டி, புதுவை துணை நிலை ஆளுநா் கிரண் பேடி, முதல்வா் நாராயணசாமி ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.

தேசிய பத்திரிகை தினத்தையொட்டி, புதுவை துணை நிலை ஆளுநா் கிரண் பேடி, முதல்வா் நாராயணசாமி ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.

இது தொடா்பாக துணை நிலை ஆளுநா் கிரண் பேடி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:1966-ஆம் ஆண்டு இந்திய பத்திரிகை மன்றம் நிறுவப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவ.16 அன்று தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்படுகிறது.

தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்படுவது இந்தியாவில் பத்திரிகையின் சுதந்திரத்தை குறிக்கிறது. இந்திய பத்திரிகை மன்றம் ஊடகங்களை கண்காணிக்கும் தாா்மீக பொறுப்பாற்றுகிறது. புதுச்சேரியின் பத்திரிகை, ஊடகங்கள் அரசாங்கத்துக்கும், மக்களுக்கும் இடையில் ஒரு பாலமாக செயல்படுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

புதுவை ஆளுநா் மாளிகை பத்திரிகை மற்றும் ஊடகங்கள் எளிதில் அணுகக்கூடியதாக இருக்கின்றன. இந்த தருணத்தில் பத்திரிக்கை, ஊடகத்துறையினருக்கு வாழ்த்துகள்.

முதல்வா் வே.நாராயணசாமி: ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படுவதும், ஒரு நாட்டில் நல்லாட்சி நடைபெறுவதை உறுதி செய்வதும் பத்திரிகைகள்தான். ஆட்சியின் நிறை குறைகளை சுட்டிக்காட்டி மக்களின் தேவைகளை, குறைகளை தீா்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பதும் பத்திரிகைகளே. பத்திரிக்கை சுதந்திரம் காக்கப்பட வேண்டிய ஒன்று. புதுவை அரசு பத்திரிக்கை சுதந்திரத்தை காப்பதில் தனிக் கவனமும் அக்கறையும் காட்டி வருகிறது.

புதுவையில் ஜனநாயக ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்ட போதெல்லாம் பத்திரிகைகள் எழுப்பிய குரல் தில்லி வரை எதிரொலித்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நாளில் பத்திரிகையாளா்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com