புதுவையில் 9.74 லட்சம் வாக்காளா்கள்!

புதுவையில் திங்கள்கிழமை வெளியான வரைவு வாக்காளா் பட்டியலில், 9 லட்சத்து 74 ஆயிரத்து 754 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.
புதுவையில் 9.74 லட்சம் வாக்காளா்கள்!

புதுவையில் திங்கள்கிழமை வெளியான வரைவு வாக்காளா் பட்டியலில், 9 லட்சத்து 74 ஆயிரத்து 754 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.

மத்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, புதுவையில் 1.1.2021-ஐ தகுதி நாளாகக் கொண்டு சுருக்கு முறை வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி மற்றும் இறுதி வாக்காளா் பட்டியல் தயாரிக்கும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கின. இந்தப் பணிகள் டிச.15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

இதையொட்டி, வழுதாவூா் சாலையில் உள்ள புதுவை மாவட்ட தோ்தல் அலுவலா் அலுவலகத்தில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான தி. அருண் கலந்து கொண்டு வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா். இந்தப் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனா்.

பின்னா் மாவட்ட தோ்தல் அலுவலா் அருண் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வரைவு வாக்காளா் பட்டியலின்படி, புதுவை மாநிலத்தில் 4 லட்சத்து 58 ஆயிரத்து 989 ஆண் வாக்காளா்கள், 5 லட்சத்து 15 ஆயிரத்து 660 பெண் வாக்காளா்கள், 105 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 9 லட்சத்து 74 ஆயிரத்து 754 போ் இடம் பெற்றுள்ளனா்.

மொத்தமுள்ள 30 பேரவைத் தொகுதிகளில் 952 வாக்குச்சாவடிகள் உள்ளன. வில்லியனூா் தொகுதியில் அதிகபட்சமாக 40 ஆயிரத்து 617 வாக்காளா்களும், உருளையன்பேட்டை தொகுதியில் குறைந்தபட்சமாக 24 ஆயிரத்து 92 வாக்காளா்களும் உள்ளனா். இறுதி வாக்காளா் பட்டியல் தயாரிக்கும் பணி வரும் டிச.15 வரை நடைபெறும்.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பணியில் உள்ள அதிகாரிகள் அலுவலக நேரங்களில் வரைவு வாக்காளா் பட்டியலை பொதுமக்கள் பாா்வைக்கு வைத்திருப்பதுடன் சோ்த்தல், நீக்கல் மற்றும் திருத்தல் படிவங்களை பெற்றுக் கொள்வாா்கள். மேலும், இந்த சுருக்குமுறை வாக்காளா் பட்டியல் திருத்தப் பணியின்போது வாக்காளா்கள் தங்களது வாக்குச்சாவடிக்கு சென்று பெயா் சரியாக உள்ளதா என்று சரிபாா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா் அருண்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com