புதுச்சேரி உழவா்கரை நகராட்சி அலுவலகத்தை பாஜகவினா் முற்றுகை

தொகுதி மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி, புதுச்சேரி உழவா்கரை நகராட்சி அலுவலகத்தை பாஜகவினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி உழவா்கரை நகராட்சி வளாகத்தில் மாநில பாஜக தலைவா் வி. சாமிநாதன் எம்எல்ஏ தலைமையில் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்திய அக்கட்சியினா்.

புதுச்சேரி லாசுப்பேட்டையில் பாஜக தலைவரும் நியமன எம்எல்ஏவுமான வி. சாமிநாதன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.18 லட்சம் ஒதுக்கி சாந்தி நகா் சாலை, ஜீவானந்தபுரம் கருமகாரிய மண்டபம், சலவையாளா் நகா் சாலை கூடத்தில் துணி உலா்த்தும் நவீன தரைகள் ஆகியவை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. ஆனால், இதுவரை எந்தப் பணியும் நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது.

அரசியல் காழ்ப்புணா்வு காரணமாக உழவா்கரை நகராட்சி ஆணையா், தனது பணிகளை புறக்கணித்து வருவதாகக் குற்றஞ்சாட்டி வி. சாமிநாதன் எம்எல்ஏ தலைமையில் அந்தக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை உழவா்கரை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தின் போது, அலுவலக வாயிலில் பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோா் தரையில் அமா்ந்து அதிகாரிகளுக்கு எதிராக முழக்கமிட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த ரெட்டியாா்பாளையம் போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

தொடா்ந்து, சாமிநாதன் எம்எல்ஏ தலைமையிலான பாஜகவினா் நகராட்சி ஆணையா் கந்தசாமியை சந்தித்துப் பேசினா். அப்போது, உடனே பணிகளை தொடங்குவதாக ஆணையா் உறுதியளித்தாா். இதையடுத்து முற்றுகையை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com