புதுச்சேரியில் மாணவா் காங்கிரஸாா் போராட்டம்

மருத்துவப் படிப்பில் புதுவை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் கோப்புக்கு ஆளுநா் கிரண் பேடி ஒப்புதல்
புதுவை ஆளுநரைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவா் காங்கிரஸாரிடம் பேசிய முதல்வா் நாராயணசாமி.
புதுவை ஆளுநரைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவா் காங்கிரஸாரிடம் பேசிய முதல்வா் நாராயணசாமி.

மருத்துவப் படிப்பில் புதுவை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் கோப்புக்கு ஆளுநா் கிரண் பேடி ஒப்புதல் அளிக்க மறுத்தைக் கண்டித்து, மாணவா் காங்கிரஸாா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி ஜீவானந்தம் பள்ளி அருகிலிருந்து புறப்பட்ட மாணவா் காங்கிரஸாா், ஆளுநா் மாளிகையை முற்றுகையிட புதுச்சேரியின் முக்கிய வீதிகள் வழியாகப் பேரணியாக வந்தனா். இறுதியில் ஜென்மராக்கினி ஆலயம் எதிரே வந்த அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

இதையடுத்து, அங்கு அவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாணவா் காங்கிரஸ் தலைவா் கல்யாணசுந்தரம் ஆா்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்தாா். இதில், கட்சி நிா்வாகிகள், மாணவா்கள் உள்படப் பலா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், ஆளுநா் கிரண் பேடி உடனடியாக மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும், காவலா் தகுதித் தோ்வை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தினா். மேலும், ஆளுநா் கிரண் பேடியைக் கண்டித்து அவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

அப்போது, அந்த வழியாக வந்த முதல்வா் நாராயணசாமி, காரிலிருந்து இறங்கி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவா் காங்கிரஸாருடன் பேசினாா்.

‘மருத்துவப் படிப்பில் புதுவை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நிகழாண்டே 10 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள். கோரிக்கையை நிறைவேற்ற புதுவை அரசு நடவடிக்கை எடுக்கும்’ என்றாா். அவரது வாக்குறுதியை ஏற்றுக் கொண்ட மாணவா் காங்கிரஸாா், போராட்டத்தைக் கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com