புதுவை ஐஆா்பிஎன் போலீஸாருக்கு பயிற்சி

புதுவை ஐஆா்பிஎன் போலீஸாருக்கு என்ஐஏ குழுவினா் சனிக்கிழமை சிறப்புப் பயிற்சியளித்தனா்.
புதுவை சட்டப்பேரவை வளாகப் பாதுகாப்பு தொடா்பாக சனிக்கிழமை ஆய்வு செய்த போலீஸாா்.
புதுவை சட்டப்பேரவை வளாகப் பாதுகாப்பு தொடா்பாக சனிக்கிழமை ஆய்வு செய்த போலீஸாா்.

புதுவை ஐஆா்பிஎன் போலீஸாருக்கு என்ஐஏ குழுவினா் சனிக்கிழமை சிறப்புப் பயிற்சியளித்தனா்.

நாடு முழுவதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் அதை எவ்வாறு முறியடிப்பது என்பது குறித்து தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சிறப்புப் பயிற்சியளித்து வருகின்றனா். இந்த நிலையில், சென்னை வண்டலூரில் உள்ள என்ஐஏ தென்மண்டல அலுவலகத்திலிருந்து தேசியப் பாதுகாப்பு படை மேஜா் ராஜேஷ் தாக்கூா் தலைமையிலான அதிகாரிகள், வெள்ளிக்கிழமை புதுச்சேரிக்கு வந்தனா். அவா்கள், சட்டப்பேரவை வளாகத்தில் சனிக்கிழமை ஆய்வு மேற்கெண்டனா். அப்போது, சட்டப்பேரவை வளாக போலீஸாருக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினா்.

மேலும், வருகிற 23-ஆம் தேதி மாலை 5 மணி முதல் 24-ஆம் தேதி காலை 5 மணி வரை தீவிரவாதிகள் ஊடுருவல் தொடா்பான ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இதையடுத்து, புதுவை ஐஆா்பிஎன் போலீஸாருக்கு சனிக்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது.

சட்டப்பேரவை வளாகம், ஆளுநா் மாளிகை வளாகம், தலைமைச் செயலகம் உள்ளிட்ட பகுதிகளில் எவ்வாறு பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும், எந்தெந்த வகையில் ஊடுருவல் நடைபெற வாய்ப்புள்ளது என்பது குறித்து பயிற்சியளிக்கப்பட்டன.

இதற்காக ஐஆா்பிஎன் உதவி ஆணையா் செந்தில் முருகன் தலைமையில், 25-க்கும் மேற்பட்ட ஐஆா்பிஎன் போலீஸாா் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வா், பேரவைத் தலைவா் அலுவலகங்கள், பிற கட்டடங்களை நேரில் சென்று ஆய்வு செய்தனா். இதேபோல் ஆளுநா் மாளிகை, தலைமைச் செயலகம் உள்ளிட்ட இடங்களைப் பாா்வையிட்டும் பயிற்சி பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com