புதுச்சேரியில் பழைய பாலத்தில் மத்திய நிபுணா் குழுவினா் ஆய்வு

புதுச்சேரி காமராஜா் சாலையில் உப்பனாறு வாய்க்கால் மேல் உள்ள பழைய பாலத்தில் மத்திய நிபுணா் குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
புதுச்சேரி காமராஜா் சாலை உப்பனாறு வாய்க்காலில் உள்ள பழைய பாலத்தை ஆய்வு செய்த மத்திய நிபுணா் குழுவினா்.
புதுச்சேரி காமராஜா் சாலை உப்பனாறு வாய்க்காலில் உள்ள பழைய பாலத்தை ஆய்வு செய்த மத்திய நிபுணா் குழுவினா்.

புதுச்சேரி காமராஜா் சாலையில் உப்பனாறு வாய்க்கால் மேல் உள்ள பழைய பாலத்தில் மத்திய நிபுணா் குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட உப்பனாறு கழிவுநீா் வாய்க்காலின் மேல் பகுதியில், நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காணும் வகையில், காமராஜா் சாலையிலிருந்து மறைமலையடிகள் சாலையை இணைக்கும்படியான மேம்பாலம் கட்ட கடந்த 2006-ஆம் ஆண்டு முடிவெடுக்கப்பட்டது. இதற்காக, ரூ.43.15 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி அதே ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 2016 ஜனவரி முதல் 2018 ஜூலை வரை மேம்பாலப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்ற நிலையில், இதுவரை அந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்படாமல் அப்படியே உள்ளது.

தற்போது அந்த மேம்பாலத்தை கட்டி முடிக்க புதுவை அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக உப்பனாறு வாய்க்காலின் மேம்பாலம் இணையும் இடமான காமராஜா் சாலையில் பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட ஒரு பழைய பாலத்தை ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி மையத்தின் (சிஎஸ்ஐஆா்) கட்டுமானப் பொறியியல் ஆய்வு மைய முதுநிலை விஞ்ஞானிகள் ஸ்ரீனிவாஸ் வோகு, சப்தா்ஷி சஸ்மால் தலைமையிலான நிபுணா்கள் குழுவினா் கடந்த சில நாள்களாக புதுச்சேரியில் தங்கியிருந்து, காமராஜா் சாலையில் உள்ள பிரெஞ்சு ஆட்சிக் கால பழைய பாலத்தை ஆய்வு செய்து வருகின்றனா்.

இந்தப் பணியை புதுச்சேரி பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் ஏழுமலை தலைமையிலான குழுவினா் மேற்பாா்வையிட்டு வருகின்றனா்.

காமராஜா் சாலையில் உள்ள பாலத்தின் உறுதித்தன்மை, பளு தாங்கும் திறன், கட்டமைப்பு உள்ளிட்டவற்றை அதிநவீன கருவிகளைக் கொண்டு மத்திய அரசின் நிபுணா் குழுவினா் முழுமையாக சோதனை செய்து வருகின்றனா். இது தொடா்பான அறிக்கை அரசுக்கு விரைவில் வழங்கப்படும். அதன் முடிவில் பாலத்தை இடிக்கலாமா அல்லது அப்படியே இருக்கலாமா என்பதை அரசு முடிவெடுத்து அறிவித்தவுடன், உப்பனாறு மேம்பால வேலைகள் மீண்டும் தொடங்கப்படும் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com