புதுச்சேரியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா

முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் பிறந்த நாள் விழா புதுச்சேரியில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி லாசுப்பேட்டை கோளரங்கில் உள்ள அப்துல் கலாம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா் மு.கந்தசாமி.
புதுச்சேரி லாசுப்பேட்டை கோளரங்கில் உள்ள அப்துல் கலாம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா் மு.கந்தசாமி.

முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் பிறந்த நாள் விழா புதுச்சேரியில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி லாசுப்பேட்டை அறிவியல் கோளரங்கில் உள்ள அப்துல் கலாமின் சிலைக்கு அமைச்சா் கந்தசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில் க.வெங்கடேசன் எம்எல்ஏ உள்ளிட்ட பலா் பங்கேற்று மாலை அணிவித்தனா்.

பாஜகவினா் மரியாதை: காலாப்பட்டு தொகுதி பாஜக சாா்பில், அப்துல் கலாமின் உருவப் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநில பாஜக பொதுச் செயலா் ஏம்பலம் செல்வம் அப்துல் கலாம் படத்துக்கு மரியாதை செலுத்தியதுடன், பள்ளி மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்கினாா்.

நிகழ்வில் தொகுதி பொதுச் செயலா் குணசீலன், ஓபிசி அணி மாநிலச் செயலா் வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் இளைஞரணி அமைப்புகள், சமுதாய இயக்கங்கள் சாா்பில், அப்துல் கலாமின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com