இளம்பெண்ணிடம் நகை பறிப்பு
By DIN | Published On : 28th October 2020 08:12 AM | Last Updated : 28th October 2020 08:12 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் இளம்பெண்ணிடம் தங்க நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
புதுச்சேரி மேரி உழவா்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரா் நகா் வேல்முருகன் மகள் மோனிஷா (18). இவா், தனது தங்கையின் இணையதள தோ்வு நோட்டை பள்ளியில் சமா்ப்பிக்க எடுத்துக் கொண்டு திங்கள்கிழமை பைக்கில் சென்றாா்.
மேரி உழவா்கரை மாரியம்மன் கோயில் அருகே சென்ற போது, பின்தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா் ஒருவா், மோனிஷா அணிந்திருந்த அரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. ரெட்டியாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.