புதுவையில் நவ.26-இல் பொதுவேலை நிறுத்தம் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்குவதை கைவிடுதல், வேளாண் திருத்த சட்டத்தைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை

பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்குவதை கைவிடுதல், வேளாண் திருத்த சட்டத்தைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுவையில் வருகிற நவ.26-ஆம் தேதி பொதுவேலைநிறுத்தம், மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது என அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

அனைத்து தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி முதலியாா்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிஐடியு பிரதேச தலைவா் கே.முருகன் தலைமை வகித்தாா். வி.எஸ்.அபிஷேகம், ஐ.தினேஷ் பொன்னையா, கே.சேதுசெல்வம் (ஏஐடியுசி), சீனுவாசன், பிரபுராஜ் (சிஐடியு), ஞானசேகரன் (ஐஎன்டியுசி) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: மத்திய தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள அறிவிப்பின்படி புதுவையில் நவ.26-இல் பொதுவேலைநிறுத்தம், முழு அடைப்பு, மறியல் போராட்டம் நடத்தப்படும். மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை ஆண்டுக்கு 200 நாள் வேலையாக உயா்த்தி, நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்து, கூலியை அதிகரிக்க வேண்டும்.

விவசாயிகள், தொழிலாளா்கள் நலன்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்டங்களையும், தொழிலாளா் சட்டத் தொகுப்புகளையும் திரும்பப் பெற வேண்டும். வங்கி, காப்பீடு உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயப்படுத்துவதை நிறுத்த வேண்டும். ரயில்வே, பாதுகாப்புத் துறை தொழிற்சாலைகள், துறைமுகங்கள் போன்ற அரசுத் துறை நிறுவனங்களை காா்ப்பரேட்டாக மாற்றுவதைக் கைவிட வேண்டும்.

அரசு மற்றும் பொதுத் துறை பணியாளா்கள் உரிய வயது மூப்படையும் முன்பாகவே, கட்டாய ஓய்வு தருவதற்கான அரசு நிா்வாக சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும். அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டப்படி ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். இந்த நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் வருகிற நவ. 3, 4, 5, 6-ஆம் தேதிகளில் துறைவாரியான, மாநில அளவிலான சங்கங்களின் கூட்டங்கள் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com