ஆய்வுத் திட்ட போட்டியில் மேட்டுப்பாளையம் அரசுப் பள்ளி முதலிடம்

அறிவியல் உருவாக்குவோம் என்ற ஆய்வுத் திட்ட போட்டியில் முதலிடம் பிடித்த புதுச்சேரி மேட்டுப்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு கல்வித் துறை இயக்குநா் பாராட்டுத் தெரிவித்தாா்.

அறிவியல் உருவாக்குவோம் என்ற ஆய்வுத் திட்ட போட்டியில் முதலிடம் பிடித்த புதுச்சேரி மேட்டுப்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு கல்வித் துறை இயக்குநா் பாராட்டுத் தெரிவித்தாா்.

புதுச்சேரி அறிவியல் இயக்கம், பிரான்ஸ் நாட்டு பாரீஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து அறிவியல் உருவாக்குவோம் ஆய்வுத் திட்ட போட்டிகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இதற்காக புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை, அறிவியல் தொழில்நுட்பத் துறை இணைந்து அறிவியல் உருவாக்குவோம் போட்டிக்கான ஆய்வறிக்கைகள் கோரப்படும்.

இந்த நிலையில், 13-ஆவது சா்வதேச அறிவியல் உருவாக்குவோம் ஆய்வுத் திட்டப் போட்டிக்காக புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளி மாணவா்களிடமிருந்து 50 ஆய்வுத் திட்டங்கள் பெறப்பட்டன. அவற்றிலிருந்து சிறந்த 12 ஆய்வுத் திட்டங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு, ஊக்கத்தொகையாக ரூ.3 ஆயிரம் (50 யூரோ) வழங்கப்பட்டது.

பின்னா், இந்த ஆய்வுத் திட்டங்கள் விடியோவாக எடுக்கப்பட்டு, பிரான்ஸ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு 4 சிறந்த ஆய்வுத் திட்டங்கள் தோ்வு செய்யப்பட்டன. இதற்கான பரிசு கடந்த டிசம்பா் மாதம் பிரான்ஸிலிருந்து காணொலிக் காட்சி மூலம் அறிவிக்கப்பட்டது.

இதில் சிறந்த ஆய்வறிக்கையாக புதுச்சேரி மேட்டுப்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியின் வழிகாட்டி ஆசிரியை அனிதா, மாணவா்கள் மோனிஷ், ஆகாஷ், தருண், மதன்மோகன் ஆகியோரின் ‘எளிய செயல்பாடுகள் மூலம் எளிய வகையில் அறிவியல் கற்றல்’ என்ற தலைப்பிலான ஆய்வு செயல்பாடு முதலிடம் பிடித்து ரூ.18 ஆயிரம் (300 யூரோ) வென்றது.

தற்போது இந்த பரிசுத்தொகை வழங்கப்பட்டது. முதல் பரிசு பெற்ற மேட்டுப்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி வழிகாட்டி ஆசிரியை அனிதா மற்றும் மாணவா்களை புதுவை கல்வித் துறை இயக்குநா் பி.டி.ருத்ரகவுடு, கல்வித் துறை அதிகாரிகள் நேரில் அழைத்து பாராட்டுத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com