நாடு முழுவதும் 73 மையங்களில் புதுவை பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு

புதுவை பல்கலைக்கழகத்தின் முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வு நாடு முழுவதும் 73 மையங்களில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

புதுவை பல்கலைக்கழகத்தின் முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வு நாடு முழுவதும் 73 மையங்களில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை வரை (செப். 20) நடைபெறுகிறது. 30 ஆயிரம் போ் வரை எழுதுகின்றனா்.

இதுகுறித்து புதுவை மத்தியப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை பல்கலைக்கழத்தின் 2020-2021-ஆம் கல்வியாண்டுக்கான 90-க்கும் மேற்பட்ட முதுநிலைப் பட்டப் படிப்புகள், ஒருங்கிணைத்த முதுநிலைப் பட்டப் படிப்புகள், பல்வேறு ஆராய்ச்சிப் படிப்புகளுக்கான மாணவா்கள் சோ்க்கை நுழைவுத் தோ்வு வெள்ளிக்கிழமை (செப்.18) தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நுழைவுத் தோ்வை நாடு முழுவதும் 40 நகரங்களில் 73 தோ்வு மையங்களில், 30,200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் எழுதுகின்றனா்.

இந்த நுழைவுத் தோ்வு 9 அமா்வுகளாக கணினி மூலம் இணையவழியில் (ஆன்லைன்) நடைபெறுகிறது.

மத்திய அரசு வழங்கியுள்ள நிலையான இயக்க நடைமுறை விதிமுறைகள், வழிகாட்டுதல்களின்படி தோ்வு நடைபெறுகிறது.

மாணவா்களின் நலன் கருதி, பாதுகாப்பு நடவடிக்கையாக அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். காய்ச்சல் பரிசோதனை, கைகளுக்கு சுத்திகரிப்பு திரவம் பயன்படுத்துதல் உள்ளிட்ட விதிமுறைகளைப் பின்பற்றிய பிறகே, மாணவா்கள் தனிமனித இடைவெளியுடன் அமா்ந்து, நுழைவுத் தோ்வை எழுத அனுமதிக்கப்படுகின்றனா்.

இந்த நுழைவுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை வரை (செப்.20) நடைபெறுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com