புதுவையில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் தொடங்கின

புதுவையில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் இறுதியாண்டு மாணவ, மாணவிகளுக்கு இன்று முதல் செமஸ்டர் தேர்வு நடக்கிறது.
புதுவையில் செமஸ்டர் தேர்வு எழுதும் கல்லூரி மாணவர்கள்.
புதுவையில் செமஸ்டர் தேர்வு எழுதும் கல்லூரி மாணவர்கள்.

புதுவையில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் இறுதியாண்டு மாணவ, மாணவிகளுக்கு செமஸ்டர் தேர்வு இன்று முதல் தொடங்கியது.

தேர்வுகளை கணினி மூலம் ஆன்லைனிலும், தேர்வு மையங்களுக்கு வந்து ஆப்லைனிலும் எழுதலாம். இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு ஆப்லைனிலும், ஆன்லைனிலும் நடத்தப்படும். மாணவ, மாணவியர் தாங்கள் விரும்பும் முறையில் தேர்வு எழுதலாம். மாணவர்கள் ஐந்து பாடங்களை தேர்வு எழுதினால் சில பாடங்களை ஆப்லைனிலும், சில பாடங்களை ஆன்லைனிலும் கலந்து எழுதலாம். 

பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதல் படி இறுதி செமஸ்டர் தேர்வின்போது புத்தகம், குறிப்பேடு உடன் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதலாம். திறந்த புத்தகத் தேர்வு முறையில் தேர்வு எழுத மாணவர்கள் தேர்வு அறைக்கு புத்தகங்கள், குறிப்புகள், பிற ஆய்வு பொருள்கள் எடு்த்து வரலாம் என்று, பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.

இதன்படி அனைத்து கல்லூரிகளிலும் திங்கள்கிழமை செமஸ்டர் தேர்வு தொடங்கியது. புதுச்சேரியில் உள்ள அனைத்து கலை அறிவியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகளில் முதல் நாள் தேர்வில் ஏராளமான மாணவர்கள் கல்லூரி தேர்வு மையங்களில் கலந்து கொண்டனர். சிலர் நேரடியாக கணினி மூலம் இணைய வழியில் தேர்வு எழுதினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com