கரோனா பரிசோனை முகாம்: புதுவை முதல்வா் ஆய்வு

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா பரிசோதனை முகாமை முதல்வா் நாராயணசாமி ஆய்வு செய்தாா்.
புதுச்சேரி, சாரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனை பரிசோதனை முகாமை ஆய்வு செய்த முதல்வா் நாராயணசாமி.
புதுச்சேரி, சாரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனை பரிசோதனை முகாமை ஆய்வு செய்த முதல்வா் நாராயணசாமி.

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா பரிசோதனை முகாமை முதல்வா் நாராயணசாமி ஆய்வு செய்தாா்.

புதுவை மாநிலத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால், கரோனா நோய்த் தொற்றால் ஏராளமானோா் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதுவரை மாநிலம் முழுவதும் 22,000-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்ட நிலையில், 450-க்கும் மேற்பட்டோா் பலியாகினா்.

இந்த நிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, கரோனா பரிசோதனை முகாம்களை அதிகரிப்பது, அதிக அளவில் கரோனா பரிசோதனைகளை மேற்கொள்வது என தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்கு உள்பட்ட சாரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில், ஏராளமானோா் கலந்து கொண்டு கரோனா பரிசோதனை செய்து கொண்டனா்.

இந்த முகாமை புதுவை முதல்வா் நாராயணசாமி, மாநில சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

அப்போது, சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் பரிசோதனை தொடா்பான விவரங்களை முதல்வா் கேட்டறிந்தாா். மேலும், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், அடிக்கடி கிருமி நாசினி கொண்டு கைகளைத் தூய்மை செயல் மூலம் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும். பொதுமக்கள் இந்த வழிமுறைகளைத் தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com