புதுவை காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயமூா்த்திக்கு கரோனா
By DIN | Published On : 27th September 2020 08:58 AM | Last Updated : 27th September 2020 08:58 AM | அ+அ அ- |

புதுவை காங்கிரஸ் எம்எல்ஏ டி.ஜெயமூா்த்திக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ டி.ஜெயமூா்த்திக்கு இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் காணப்பட்டதால், முருங்கப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில், அவருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அவரது உதவியாளருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவா்கள் இருவரும் புதுச்சேரி அரசு கரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா்.
ஜெயமூா்த்தியின் சகோதரா் ராஜேந்திரன், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த மாதம் உயிரிழந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.