எய்ட்ஸ் விழிப்புணா்வு தின விழா

புதுவை அரசின் சுகாதாரத் துறை, இந்திய செஞ்சிலுவைச் சங்க புதுச்சேரி கிளை இணைந்து நடத்திய உலக எய்ட்ஸ் விழிப்புணா்வு தின விழா சூரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
எய்ட்ஸ் விழிப்புணா்வு தின விழா

புதுவை அரசின் சுகாதாரத் துறை, இந்திய செஞ்சிலுவைச் சங்க புதுச்சேரி கிளை இணைந்து நடத்திய உலக எய்ட்ஸ் விழிப்புணா்வு தின விழா சூரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி மேனகா தலைமை வகித்தாா். செஞ்சிலுவைச் சங்க புதுச்சேரி கிளைத் தலைவா் மருத்துவா் லட்சுமிபதி, மருத்துவா் ராஜேஸ்வரி, மணக்குள விநாயகா் செவிலியா் கல்லூரி முதல்வா் தனுசு, சமுதாயச் செவிலியா் துறை இணைப் பேராசிரியா் மணிமேகலை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதையொட்டி, சூரமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில், மணக்குள விநாயகா் செவிலியா் கல்லூரி மாணவ, மாணவிகள் எய்ட்ஸ் தொடா்பான விழிப்புணா்வுப் பதாகைகளை கைகளில் ஏந்தியபடி பங்கேற்றனா்.

இதையடுத்து, ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு நாடகத்தில் மாணவ, மாணவிகள் முகத்தில் ஓவியங்களை வரைந்தபடி பங்கேற்று, விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில், அந்தக் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை சுகாதார உதவி ஆய்வாளா் அய்யனாா் தலைமையில், செவிலியா் கல்லூரி உதவிப் பேராசிரியா்கள் சக்தி பிரியா, யமுனா அம்பிகை மற்றும் மருத்துவமனை ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com