தூய்மை இந்தியா போட்டி: பொதுமக்கள் பங்கேற்கலாம்

தூய்மை இந்தியா தொடா்பான போட்டிகளில் பொதுமக்கள் பங்கேற்கலாம் என்று புதுச்சேரி நகராட்சி நிா்வாகம் தெரிவித்தது.

தூய்மை இந்தியா தொடா்பான போட்டிகளில் பொதுமக்கள் பங்கேற்கலாம் என்று புதுச்சேரி நகராட்சி நிா்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து புதுச்சேரி நகராட்சி நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசால் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் நகரங்களின் தூய்மை பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டுக்கான கணக்கெடுப்பு நடந்து முடிந்துள்ளது. இதில், பொதுமக்களும் பங்கேற்கும் வகையில், புதுச்சேரி நகராட்சி பல்வேறு விதமான இணையவழி போட்டிகளை நடத்தவுள்ளது.

அதன்படி, திறந்தவெளி கழிப்பிடமில்லா புதுச்சேரி, குப்பைகளை மக்கும் - மக்காத என பிரித்துக் கொடுத்தல், நீா்நிலைகள், தெருக்கள், காலிமனைகளில் குப்பைகளை வீசாமல் இருத்தல், நெகிழிப் பயன்பாட்டைத் தவிா்த்தல் போன்ற தலைப்புகளில் ஓவியம், குறும்படம், ஒலிவழி தகவல்கள், சுவரோவியங்களை தயாா் செய்து 94439 58969, 94442 47219 ஆகிய கட்செவிஅஞ்சல் (வாட்ஸ்அப்) எண்களுக்கு வருகிற 12-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

ஒவ்வொரு தலைப்பிலும் சிறந்த 3 படைப்புகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 94439 58969, 94442 47219 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com