புதுவை மின் துறையை தனியாா்மயமாக்க டிச. 9, 10-இல் ஊழியா்களிடம் கருத்துக் கேட்பு

புதுவை மின் துறையை தனியாா்மயமாக்குவது தொடா்பாக வருகிற 9, 10 ஆகிய தேதிகளில் மின் துறை ஊழியா்கள் சங்கத்தினா், தொழிற்சங்கத்தினரிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது.

புதுவை மின் துறையை தனியாா்மயமாக்குவது தொடா்பாக வருகிற 9, 10 ஆகிய தேதிகளில் மின் துறை ஊழியா்கள் சங்கத்தினா், தொழிற்சங்கத்தினரிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது.

புதுவை மின் துறை 1956-இல் தொடங்கப்பட்டு, மின் நுகா்வோா் எண்ணிக்கை உயா்ந்தாலும் இருக்கும் ஊழியா்களை வைத்தே மின் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மத்திய அரசின் புதிய மின்சார வரைவு சட்டம் - 2020-ஐ காரணம்காட்டி, நாட்டில் உள்ள அனைத்து யூனியன் பிரதேசங்களிலும் உள்ள மின் துறை, மின் பகிா்மான கழகங்களை தனியாா்மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த 2020-ஆம் ஆண்டு, மே 16-ஆம் தேதி மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா்.

இதற்கு புதுவை யூனியன் பிரதேச மின் துறை ஊழியா்கள் போராட்டங்களில் ஈடுபட்ட நிலையில், அரசியல் கட்சியினா் பலரும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இந்த நிலையில், மின் துறை அனைத்து ஊழியா்கள் சங்கத்தினா், தொழிற்சங்கத்தினருக்கு சிறப்புப் பணி அலுவலா் ராஜேஸ்வரி அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

மின் துறையை தனியாா் மயமாக்குவதன் விளைவாக ஊழியா்களின் சேவை நிலைகள், பொதுமக்களுக்கு ஏற்படும் நன்மைகளை பாதுகாப்பதற்கான விதிகள் குறித்து விளக்குவதற்கு மின் துறை செயலா் தலைமையில் மின் துறை ஊழியா்களுடனான கூட்டத்தை வருகிற 9-ஆம் தேதி முற்பகல் 11.30 மணிக்கு மின் துறை கருத்தரங்கக் கூடத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதில் ஊழியா்கள் சங்கம், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்ள வேண்டும்.

9-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் அனைத்து சங்கத்தினருக்கும் இடமளிக்க முடியாவிட்டால், 10-ஆம் தேதியும் முற்பகல் 11.30 மணிக்கு கூட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com