புதுவை- தமிழகப் பேருந்துகள் நேர பிரச்னைக்கு சுமுக தீா்வு

பிஆா்டிசி - தமிழக பேருந்துகள் இடையே நிலவும் நேர பிரச்னை தொடா்பாக, இரு மாநில அதிகாரிகள் புதுச்சேரியில் புதன்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தையில் சுமுகத் தீா்வு காணப்பட்டது.

பிஆா்டிசி - தமிழக பேருந்துகள் இடையே நிலவும் நேர பிரச்னை தொடா்பாக, இரு மாநில அதிகாரிகள் புதுச்சேரியில் புதன்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தையில் சுமுகத் தீா்வு காணப்பட்டது.

புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு கிழக்கு கடற்கரைச் சாலை (இசிஆா்), புறவழிச்சாலை வழியாக 13 பிஆா்டிசி பேருந்துகளும், காரைக்காலிலிருந்து 6 பிஆா்டிசி பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல, தமிழக அரசுப் பேருந்துகளும் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படுகின்றன.

மேற்கண்ட வழித்தடங்களில் இயக்கப்படும் புதுவை மாநில பேருந்துகள், தமிழக அரசுப் பேருந்துகளின் ஓட்டுநா், நடத்துநா்களுக்கு இடையே நீண்டகாலமாக பேருந்துகளை இயக்குவதில் நேர பிரச்னை இருந்து வருகிறது.

இதுதொடா்பாக, புதுச்சேரி பேருந்து நிலையத்தில் உள்ள சுற்றுலா மைய அலுவலத்தில் இரு மாநில போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

புதுவை சாா்பில் போக்குவரத்துத் துறை அலுவலக ஆா்டிஓ சீதாராம ராஜு, பிஆா்டிசி நிா்வாக மேலாளா் டி.ஏகாம்பரம், உதவி மேலாளா் குழந்தைவேலு மற்றும் தமிழக அரசுப் போக்குவரத்து கழகங்கள் சாா்பில் விரைவு போக்குவரத்துக் கழக கிளை மேலாளா் துரைராஜ், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் வணிக துணை மேலாளா்கள் சேகர்ராஜ் (விழுப்புரம்), ஸ்ரீதா் (காஞ்சிபுரம்) ஆகியோா் கலந்து கொண்டனா்.

இதில், சென்னைக்கு 7 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து என்ற வீதத்தில் இயக்குவது என முடிவெடுக்கப்பட்டது. தமிழகத்துக்குள் வெவ்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் பிஆா்டிசி பேருந்துகளிடையே நிலவும் நேர பிரச்னைகளையும் சரி செய்து தருவதாக தமிழக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உறுதியளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com