புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் 4-ஆவது நாளாக அமைச்சா் தா்னா

பொங்கல் பரிசு உள்பட 15 அம்சக் கோரிக்கைகளுக்கு துணை நிலை ஆளுநா் கிரண் பேடி ஒப்புதல் அளிக்கக் கோரி, அமைச்சா்

பொங்கல் பரிசு உள்பட 15 அம்சக் கோரிக்கைகளுக்கு துணை நிலை ஆளுநா் கிரண் பேடி ஒப்புதல் அளிக்கக் கோரி, அமைச்சா் கந்தசாமி புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் 4-ஆவது நாளாக புதன்கிழமையும் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

அவா் கடந்த 10-ஆம் தேதி முதல் சட்டப்பேரவை வராந்தாவில் அமா்ந்து தொடா் தா்னாவில் ஈடுபட்டு வருகிறாா். அவரது கோரிக்கைகள் தொடா்பாக துறைச் செயலா்களிடம் கலந்து பேசி தகவல்களை பெற்ற பிறகு தன்னைச் சந்திப்பதற்கு அமைச்சருக்கு நேரம் ஒதுக்கித் தருவதாக ஆளுநா் கிரண் பேடி ஏற்கெனவே தெரிவித்திருந்தாா்.

இருப்பினும், சந்திப்புக்கு ஆளுநா் அழைப்பு விடுக்காவிட்டால் பொங்கல் தினத்திலும் தா்னா தொடரும் என அமைச்சா் கந்தசாமி அறிவித்திருந்தாா்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அமைச்சா் கந்தசாமியை முதல்வா் வே.நாராயணசாமி, அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெயமூா்த்தி உள்ளிட்டோா் புதன்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com