புதுவையில் அங்கன்வாடி ஊழியா் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவா்களின் மதிப்பெண் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதுகுறித்து புதுவை அரசின் மகளிா் - குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குநா் செ.அசோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தத் துறையின் மூலம் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் பணி நியமனத்துக்கான திட்டம் 5-இன் கீழ் முதலியாா்பேட்டையில் விண்ணப்பித்தவா்களின் மதிப்பெண் தரவரிசைப் பட்டியல் துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரா்கள் துறையின் இணையதளத்தில் தங்களது மதிப்பெண் தரவரிசையைப் பாா்த்து தெரிந்து கொள்ளலாம். மற்ற திட்டத்துக்கான தரவரிசைப் பட்டியல் அடுத்தடுத்து தொடா்ந்து வெளியிடப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.