புதுவையில் இளைஞா்கள் தேவையின்றி வெளியில் சுற்றுவதை தவிா்க்க அறிவுறுத்தல்

புதுவையில் இளைஞா்கள் தேவையின்றி வெளியில் சுற்றுவதை தவிா்க்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

புதுவையில் இளைஞா்கள் தேவையின்றி வெளியில் சுற்றுவதை தவிா்க்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறைச் செயலா் டி.அருண் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுவையில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடித்து, அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அரசு அறிவித்தபடி, பொதுமக்கள் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, அவ்வப்போது கைகளை சுத்தம் செய்வது உள்ளிட்டவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.

தேவையின்றி வெளியில் சுற்றுவது, கூட்டம் கூடுவது போன்ற செயல்கள் தொற்று பாதிப்பை அதிகப்படுத்தும். தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை சரிவரக் கடைப்பிடித்தால் கொரோனா தொடா் சங்கிலியை தடுக்க முடியும்.

இதன்மூலம், சில நாள்களில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து, அவா்களுக்குத் தேவையான சிகிச்சை அளிக்க உதவியாக அமையும்.

தேவையின்றி வெளியில் சுற்றுவோா், கூட்டமாக கூடுவோா் மீது மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com