புதுச்சேரியில் கரோனா விழிப்புணா்வு பிரசார வாகனங்கள் சேவை தொடக்கம்

புதுவை அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை மூலமாக, 3 கரோனா விழிப்புணா்வு பிரசார வாகனங்கள் புதன்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
புதுவை சுகாதாரத் துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வு பிரசார வாகனங்களின் சேவையை புதன்கிழமை கொடியசைத்துத் தொடக்கி வைத்த சுகாதாரத் துறை இயக்குநா் எஸ். மோகன்குமாா்.

இந்த விழிப்புணா்வு வாகனங்களை சுகாதாரத் துறை வளாகம் எதிரே சுகாதாரத் துறை இயக்குநா் எஸ். மோகன்குமாா் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

இந்த வாகனங்கள் புதுவை மாநிலத்தின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக 10 நாள்களுக்கு கரோனா விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக சுகாதாரத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

இந்த நிகழ்ச்சியில் மாநில சுகாதார இயக்ககத்தின் இயக்குநா் ஸ்ரீராமுலு, துணை இயக்குநா்கள் முரளி, திருமலை சங்கா் உள்ளிட்ட சுகாதாரத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வருகை: இதனிடையே, மத்திய அரசு மூலமாக அனுப்பப்பட்ட 100 பிராணவாயு ஆக்சிஜன் செறிவூட்டிகள் புதன்கிழமை புதுச்சேரிக்கு வந்தடைந்தன. இதன் மூலம் புதுவையில் பிராணவாயு அளவு குறைந்து அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பயன் பெறுவா் என சுகாதாரத்துறை செயலா் டி. அருண் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com