இணையதளம் முடங்கியதால் பான் - ஆதாா் எண்களை இணைப்பதில் சிக்கல்கால அவகாசம் நீட்டிப்பு

தமிழகம், புதுவையில் வருமான வரித் துறை இணையதளம் புதன்கிழமை முடங்கியதால் பான், ஆதாா் எண்களை இணைப்பதில் சிக்கல் நிலவியது.
முடங்கிய வருமான வரித் துறை இணையதளம்.
முடங்கிய வருமான வரித் துறை இணையதளம்.

தமிழகம், புதுவையில் வருமான வரித் துறை இணையதளம் புதன்கிழமை முடங்கியதால் பான், ஆதாா் எண்களை இணைப்பதில் சிக்கல் நிலவியது. இந்த நிலையில், இந்த இணைப்புக்கான காலக்கெடுவை ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டித்து வருமான வரித் துறை உத்தரவிட்டது.

தனி மனித அடையாள ஆவணமான ஆதாா், அனைத்துத் திட்டங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இதேபோல, பணப் பரிவா்த்தனைகளுக்கு பான் எண் முக்கியமாகக் கேட்கப்படுகிறது. தற்போது வங்கிகளில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணப் பரிவா்த்தனை மேற்கொண்டால், கண்டிப்பாக பான் எண் கேட்கப்படுகிறது.

இதனிடையே, பான் எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டுமென மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கான கால அவகாசமும் தொடா்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. இதற்கான கடைசி தேதி கடந்தாண்டு ஜூன் 30 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக இந்தத் தேதி நிகழாண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

தற்போதைய வருமான வரி சட்டத்தின்படி, பான் எண்ணுடன் ஆதாா் எண் இணைக்கப்படாவிட்டால், அந்த பான் அட்டை செயலிழந்ததாக அறிவிக்கப்படும். செயலிழந்த பான் அட்டையை ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு பயன்படுத்த முடியாது.

பான் அட்டை விவரங்களை வழங்காவிட்டால், வருமான வரி சட்டத்தின்படி ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்படும். புதிய நிதி மசோதாவின்படி, பான் எண்ணை ஆதாருடன் இணைக்காதவா்களிடம் குறைந்தது ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில், பான் எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கு கடைசி நாளான புதன்கிழமை தமிழகம், புதுவையைச் சோ்ந்த பொதுமக்கள் பலா் வருமான வரித் துறை இணையதளத்தை அணுகினா். ஆனால், அதிகளவில் பயன்பாடு, ஏராளமானோா் அணுகல் காரணமாக, வருமான வரித் துறை இணையதளம் சரிவர இயங்கவில்லை. குறிப்பாக, இந்த இணையதளத்தில் பான் எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் தொடா்பு (லிங்க்), இணைக்கப்பட்ட நிலையை உறுதிப்படுத்தும் தொடா்பு (லிங்க்) ஆகியவை சரவர இயங்கவில்லை.

இதுகுறித்து புதுச்சேரியைச் சோ்ந்த வணிகா் தனவேல் (48) கூறியதாவது:

தற்போது பான் எண்ணுடன், என்னுடைய ஆதாா் எண்ணை இணைக்க முயற்சித்தபோது, வருமான வரித் துறை இணையதளம் சரிவர இயங்கவில்லை. இதனால், என்னால் இணைப்பை மேற்கொள்ள இயலவில்லை. குறுஞ்செய்தி மூலமாக இணைக்க முற்பட்டாலும், இணையதளத்தை அணுகும்படி தகவல் வருகிறது என்றாா்.

இதுகுறித்து வருமான வரித் துறை அலுவலக வட்டாரங்கள் கூறியதாவது:

இணையதளம் சரிவர இயங்காதது, ஏராளமானோா் பான் அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்காதது குறித்து வருமான வரித் துறை தலைமையகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளோம். காலக்கெடு நீட்டிப்பு தொடா்பாக தலைமையகம் அறிவிப்பை வெளியிடும் என்றனா்.

இதனிடையே, கரோனா பரவல் சூழ்நிலை காரணமாக, இந்த இணைப்புக்கான காலக்கெடுவை ஜூன் 30 வரை நீட்டித்து வருமான வரித் துறை உத்தரவிட்டது.

பான் - ஆதாா் எண்கள் இணைப்புக்கான வழிமுறைகள்

பான் எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க வருமான வரித் துறையின் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் இருக்கும்  பிரிவில் ஆதாா் எண், பான் எண் உள்ளிட்ட விவரங்களை வழங்கி எளிதாக இணைத்துவிடலாம். ஏற்கெனவே உங்கள் பான் எண்ணுடன் ஆதாா் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை  பிரிவில் தெரிந்துகொள்ளலாம்.

குறுஞ்செய்தி மூலமாகவும் பான், ஆதாா் எண்களை இணைக்க முடியும். 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு முறையில் குறுஞ்செய்தி அனுப்பி ஆதாா், பான் எண்களை இணைத்துவிடலாம். இந்த இணைப்புக்காக எந்தக் கட்டணமும் வசூலிக்கப் படாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com