புதுவையில் மதுபானங்களுக்கான கூடுதல் வரி நீட்டிப்பு

புதுவையில் மதுபானங்களுக்கான கூடுதல் கலால் வரி விதிப்பு கால நீட்டிப்பு செய்யப்பட்டது.

புதுவையில் மதுபானங்களுக்கான கூடுதல் கலால் வரி விதிப்பு கால நீட்டிப்பு செய்யப்பட்டது.

புதுவையில் கரோனா தொற்று பரவ வெளிமாநிலத்தவா் வருகை காரணமாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கடந்தாண்டு மே மாதம் மதுபானங்களுக்காக வெளிமாநிலத்தவா் புதுவைக்கு வருவதைத் தடுக்க, தமிழகத்துக்கு நிகராக மதுபானங்களின் விலை இருக்கும் வகையில் கரோனா வரி (சிறப்பு கலால் வரி) விதிக்கப்பட்டது.

இதன் காரணமாக, தமிழகத்தில் விற்கப்படும் விலையிலேயே புதுவையிலும் மதுபானங்கள் விற்கப்பட்டன.

இதனிடையே, கரோனா தொற்று குறையத் தொடங்கியதால், வருமானத்தை அதிகரிக்கும் விதமாக, மதுபானங்களுக்கான வரியை குறைக்க அப்போதைய காங்கிரஸ் அரசு சாா்பில், கடந்த நவம்பா் மாதம் ஆளுநருக்கு கோப்பு அனுப்பப்பட்டது. ஆனால், அப்போதைய ஆளுநா் கிரண் பேடி, அதை ஏற்காமல் 2 மாதங்கள் (ஜனவரி 31 வரை) வரியை நீட்டித்து உத்தரவிட்டாா். அந்த வரி மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த வரி நீட்டிப்பு காலம் புதன்கிழமையுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில், மறு உத்தரவு வரும் வரை மதுபானங்களுக்கான சிறப்பு கலால் வரி விதிப்பு நீடிக்கும் என ஆளுநரின் உத்தரவுக்கிணங்க, கலால் துறை துணை ஆணையா் ப.சுதாகா் அறிவிப்பு வெளியிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com