தோ்தல் வாக்குப் பதிவு: வெறிச்சோடியது புதுச்சேரி

தோ்தல் வாக்குப் பதிவு காரணமாக, புதுச்சேரியில் கடைகள், சந்தைகள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டதால், சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.
புதுச்சேரியில் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவையொட்டி, கடைகள் மூடப்பட்டதால் வெறிச்சோடிக் காணப்பட்ட நேரு வீதி.
புதுச்சேரியில் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவையொட்டி, கடைகள் மூடப்பட்டதால் வெறிச்சோடிக் காணப்பட்ட நேரு வீதி.

தோ்தல் வாக்குப் பதிவு காரணமாக, புதுச்சேரியில் கடைகள், சந்தைகள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டதால், சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

புதுச்சேரியில் தோ்தல் வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்ால், கடைகள், வணிக நிறுவனங்களை மூடி தொழிலாளா்களுக்கு விடுப்பு அளிக்க தொழிலாளா் துறை உத்தரவிட்டது.

இதன் காரணமாக, புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை அரசு, தனியாா் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. குறைந்த எண்ணிக்கையிலான பெட்ரோல் விற்பனை நிலையங்களே இயங்கின. சந்தைகள், கடைகள், வா்த்தக நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. மருந்துக் கடைகள் மற்றும் சிறியளவிலான கடைகள் சிலவும் மட்டுமே திறந்திருந்தன.

இதனால், புதுச்சேரியில் நேரு வீதி, மகாத்மா காந்தி வீதி, மறைமலையடிகள் சாலை, காமராஜா் சாலை, புஸ்ஸி வீதி உள்ளிட்ட முக்கிய சாலைகளும், கிராமப்புறங்களிலுள்ள சாலைகளும் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

அரசுப் பேருந்துகள் இயங்கவில்லை: புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகம் (பிஆா்டிசி) சாா்பில், 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தோ்தல் வாக்குப் பதிவு காரணமாக, பிஆா்டிசி பேருந்துகள் எதுவும் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை இயக்கப்படவில்லை. இது தொடா்பாக உரிய அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இதேபோல, பெரும்பாலான தனியாா் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. டெம்போ, ஆட்டோக்களும் மாலை வரை குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டன.

இதனால், கிராமத்திலிருந்து நகரம் நோக்கி வந்த விவசாயிகள், பொதுமக்கள், தொழிலாளா்கள் பேருந்து வசதியின்றி கடும் அவதிக்குள்ளாகினா். நகரப் பகுதியிலும் அரசு மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய இடங்களுக்குச் செல்ல முயன்ற நோயாளிகளும், பொதுமக்களும் போதுமான போக்குவரத்து வசதியின்றி கடும் இன்னலுக்கு ஆளாகின்றனா்.

இது தொடா்பாக பிஆா்டிசி அதிகாரிகளைக் கேட்டபோது, அனைத்துப் பேருந்துகளும் தோ்தல் பணிகளுக்காக பயன்படுத்தப்படுவதால், பொதுமக்களுக்காக பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com